ரூ.67,000ஐ நோக்கி தங்கம் விலை! ஒரே நாளில் ரூ.840 உயர்வு! நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று சவரன் ரூ.840 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பங்குச்சந்தை வீழ்ச்சி மற்றும் போர்ச் சூழலே காரணம்.
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று சவரன் ரூ.840 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பங்குச்சந்தை வீழ்ச்சி மற்றும் போர்ச் சூழலே காரணம்.
தங்கம் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பிடித்தமான ஒன்று. அந்த வகையில் உலக நாடுகள் பட்டியலில் இந்தியாவில் அதிகளவில் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். திருமணங்கள், விஷேச நாட்களின் தங்க நகைகளின் பயன்பாடு அதிகளவில் இந்தியாவில் தான் உள்ளது.
இந்நிலையில் பங்குச்சந்தை வீழ்ச்சி, உக்ரைன்-ரஷ்யா போர், காசா-இஸ்ரேல் போர் மற்றும் தங்கத்தை பலரும் பாதுகாப்பான முதலீடாக கருதி அதில் முதலீடு செய்து வருகிறார்கள். இதனால் தேவை அதிகரித்து தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலையில் பெரிய மாற்றம் ஏற்படுகிறது.
இதையும் படிங்க: ஏடிஎம்மில் பணம் எடுக்க கூடுதல் கட்டணம்! மே 1 முதல் அமல்!
கடந்த 20-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சமாக ரூ.66,480ஐ எட்டி பொதுமக்கள் தலையில் இடியை இறக்கியது. பின்னர் கடந்த 21-ம் தேதியில் இருந்து குறைந்து வந்த தங்கம் விலை நேற்று முன்தினம் மீண்டும் அதிகரித்தது. நேற்றும் சவரன் ரூ.320 உயர்ந்தது. அதன் தொடர்ச்சியாக இன்றும் தங்கம் விலை ரூ.840 அதிரடியாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.65,880-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.8,235-க்கு விற்பனையானது.
இதையும் படிங்க: ஏப்ரலில் வங்கிகள் 12 நாட்கள் விடுமுறையா? எந்த நாட்கள்?
இன்றைய (மார்ச் 28) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. அதாவது சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.66,720-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ரூ.8,340-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் ரூ. 3 உயர்ந்து கிராம் வெள்ளி ரூ.114-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.114,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.