அந்த வகையில் தற்போது இந்தியாவில் தொடங்குவதற்கு சிறு வணிகங்களைத் தேடும் நபர்களுக்கு மூன்று சிறந்த விருப்பங்கள் உள்ளன. முதலில், ஜெராக்ஸ் கடை வைப்பது. இப்போதெல்லாம் ஜெராக்ஸ் கடைக்கு நல்ல தேவை இருக்கிறது. இருப்பினும், ஒரு கடையைத் தொடங்குவதை விட நாம் எங்கு தொடங்குகிறோம் என்பது முக்கியம்.
இவற்றை பெரும்பாலும் கலை கல்லூரிகள் அல்லது பொறியியல் கல்லூரிகளுக்கு அருகில் அமைப்பதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். திட்டப்பணிகள் முதல் தினசரி தேவைகள், பொருட்கள், குறிப்புகள் வரை, மாணவர்கள் தொடர்ந்து நிறைய நகல்களைப் பயன்படுத்துகின்றனர். எனவே இங்கு கடை அமைத்தால் நல்ல வருமானம் கிடைக்கிறது.