மாதம் ரூ.1,000 முதலீடு செய்யும் போது, நாளொன்றுக்கு ரூ.33 சேமித்தால் போதுமானது. இந்தத் தொகையை 20 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்தால், உங்களின் மொத்தச் சொந்த முதலீடு ரூ.2,40,000 ஆகும். 12% கூட்டு வட்டி வளர்ச்சியில், வட்டி லாபமாக ரூ.7,60,000 சேர்ந்து, 20 ஆண்டுகளின் முடிவில் உங்களிடம் ரூ.10,00,000 எனும் பெரிய தொகை சேர்ந்திருக்கும்.
இதே ரூ.1,000 மாதாந்திர முதலீட்டை 30 ஆண்டுகள் வரை தொய்வின்றித் தொடரும் போது, உங்கள் மொத்த முதலீட்டுத் தொகை ரூ.3,60,000 ஆக இருக்கும். 30 ஆண்டுகாலக் கூட்டு வட்டியின் ஆற்றலால், வட்டி லாபமாக மட்டும் ரூ.31,70,000 ஈட்ட முடியும். இதனால் 30 ஆண்டுகளின் இறுதியில் உங்கள் கைக்குக் கிடைக்கும் மொத்தத் தொகை ரூ.35,30,000 ஆக உயரும்.