DA Hike: அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) 2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வருகிறது. எந்த மாநிலத்தில் தெரியுமா?
DA Hike: அக்டோபர் 17 அன்று கேரள அரசு, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு DA மற்றும் DR-ஐ 2% உயர்த்தி அறிவித்தது. இதனால் அடிப்படை சம்பளத்தில் 35% ஆக இருந்த அகவிலைப்படி 37% ஆக உயர்ந்துள்ளது. இது ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் என பிடிஐ (PTI) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
211
நிதித்துறை வெளியிட்ட உத்தரவு
அக்டோபர் மாத சம்பளத்துடன் (நவம்பரில் வழங்கப்படும்) உயர்த்தப்பட்ட DA வழங்கப்படும் என மாநில நிதித்துறை அறிவித்துள்ளது. திருத்தப்பட்ட DR, நவம்பர் 2026 ஓய்வூதியத்துடன் சேர்த்து வழங்கப்படும்.
311
25 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக உயர்ந்த DA
முன்னதாக பிப்ரவரி 2026-ல், DA மற்றும் DR 25 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக உயர்த்தப்பட்டது. தொடர்ந்து அதிகரிக்கும் பணவீக்கத்தால் சிரமப்படும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த புதிய அறிவிப்பு சற்று நிம்மதி தரும்.
இந்த கூடுதல் செலவை உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் சொந்த நிதியிலிருந்தே ஏற்க வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 1, 2026 முதலான நிலுவைத் தொகைகள் குறித்து தனியாக ஒரு அரசாணை வெளியிடப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.
511
இந்த DA, DR உயர்வு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
கேரள மாநில அரசின் இந்த உயர்த்தப்பட்ட அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) எந்தெந்த ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கும், யாருக்கெல்லாம் கிடைக்காது என்பதை இப்போது பார்ப்போம்.
611
கேரள DA உயர்வு: தகுதியானவர்கள் யார்?
கேரள DA மற்றும் DR உயர்வின் பலன்களை யார் பெறுவார்கள்?
மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் ஊழியர்கள் இந்த உயர்வை பெறுவார்கள். முழுநேர தற்காலிக ஊழியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு ஊழியர்களுக்கும் இது பொருந்தும்.
711
மாநில அரசு ஓய்வூதியதாரர்கள்
மாநில அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், கருணை அடிப்படையில் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கும் இந்த அகவிலைப்படி உயர்வு கிடைக்கும்.
811
பெறும் சம்பளத்தின் அடிப்படையில் DA உயர்வு
பகுதிநேர ஆசிரியர்கள், பகுதிநேர தற்காலிக ஊழியர்கள் மற்றும் மீண்டும் பணியமர்த்தப்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கும் அவர்கள் வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில் இந்த உயர்த்தப்பட்ட DA வழங்கப்படும்.
911
நிபந்தனைகளுடன் DA உயர்வு பெறும் நிறுவனங்கள்
மாநில அரசின் DA/DR முறையை பின்பற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் (PSU), சட்டப்பூர்வ வாரியங்கள், தன்னாட்சி அமைப்புகள் மற்றும் அரசு உதவிபெறும் நிறுவனங்களும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த உயர்வை பெற தகுதியானவை.
1011
கூடுதல் செலவை ஏற்கும் திறன்
இந்த நிறுவனங்கள் தங்கள் சொந்த நிர்வாகக் குழுவின் முடிவின்படி DA உயர்வை அமல்படுத்தலாம். ஆனால் கூடுதல் செலவை ஏற்கும் திறன் அவர்களுக்கு இருக்க வேண்டும். சொந்த நிதியில் செலவை சமாளிக்க முடியாத நிறுவனங்கள் அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும். ஆனால் 90% சம்பள செலவை அரசு மானியமாக பெறும் நிறுவனங்களுக்கு இந்த விதி பொருந்தாது.
1111
உயர்த்தப்பட்ட DA மற்றும் DR யாருக்கு கிடைக்காது?
கேரள மாநில மின்சார வாரியம் (KSEB) மற்றும் கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (KSRTC) போன்ற நிறுவனங்களுக்கு இந்த உயர்வு தானாகவே அமலுக்கு வராது.
இந்த நிறுவனங்கள் தங்களின் DA மற்றும் DR தொடர்பான உத்தரவுகளை தனித்தனியாக வெளியிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.