பல முதலீட்டாளர்கள் SIP களில் தங்கள் பணத்தை முதலீடு செய்கிறார்கள். இதற்குக் காரணம் காலப்போக்கில் மிகச்சிறிய பங்களிப்புகள் கூட குறிப்பிடத்தக்க அளவு வருமானத்தைக் கொடுக்கிறது. ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் தினமும் ரூ.20 முதலீடு செய்யலாம். இதற்கு வருடாந்திர வருமானம் 14% கிடைக்கும் என வைத்துக்கொண்டால், 20 ஆண்டுகளில் ரூ.34 லட்சமாக வளரும்.
இந்த முதலீட்டுக்கு 20-20-20 ஃபார்முலாவை பயன்படுத்தலாம். இதன்படி, முதல் ஆண்டு முதலீட்டுக்கு வெறும் 7,300 ரூபாய் தேவைப்படுகிறது. பின் ஒவ்வொரு ஆண்டும் இதை 20% அதிகரிக்கலாம்.
அப்படியானால், 20 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.13.44 லட்சமாக இருக்கும். 20 வருடங்கள் கழித்து, இந்த முதலீட்டுக்குக் கிடைக்கும் வருமானம் சுமார் ரூ. 20.54 லட்சம். இரண்டும் சேர்ந்து மொத்த கார்பஸ் ரூ 33.98 லட்சம் உங்களுக்குக் கிடைக்கும்.
பங்குச்சந்தை முதலீடு பணத்தைப் பெருக்க சிறந்த வழிகளில் ஒன்று. இதில் ஆரம்பத்தில் இருந்தே 12%க்கும் அதிகமான வருடாந்திர வருவாய் கிடைத்து வருகிறது. நீண்ட கால திட்டத்துடன் முதலீடு செய்பவர்களுக்கு மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் சிறந்தவை.
Mutual Funds
குறிப்பாக, லார்ஜ்-கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் நீண்ட காலமாக அதிகமான வருமானத்தை வழங்கி வருகின்றன. கடந்த பத்தாண்டு வரலாற்றைப் பார்க்கும்போது லார்ஜ்-கேப் மியூச்சுவல் ஃபண்டுகளில் இருந்து ஆண்டுதோறும் 13-14% வருமானம் முதலீட்டாளர்களுக்குக் கிடைத்துள்ளது.
ஒரு நாளுக்கு ரூபாய் 20 வீதம் மிக சொற்பமான தொகையில் இருந்து மியூச்சுவல் ஃபண்டு SIP முதலீட்டை ஆரம்பிக்கலாம். இதை வருடம்தோறும் 20% அதிகரித்தால், காலப்போக்கில் கணிசமான தொகையைச் சேர்த்துவிடலாம். 20 ஆண்டுகள் முடிவில் முதலீடு செய்த பணத்தைவிட அதிக லாபத்தை ஈட்ட முடியும்.