காப்பீட்டுடன் சேர்த்து சேமிப்பும் தரும் எல்.ஐ.சி நிவேஷ் பிளஸ்: யார் யாருக்கு இது ஏற்றது?

Published : Oct 26, 2026, 03:30 PM IST

எல்.ஐ.சி. நிறுவனத்தின் 'நிவேஷ் பிளஸ் பிளான் 850' ஒரே முறையில் முதலீடு செய்து காப்பீடு மற்றும் பங்குச்சந்தை லாபத்தைப் பெற விரும்பும் முதலீட்டாளர்களுக்குச் சிறந்த தேர்வாகும்.

PREV
14
எல்.ஐ.சி புதிய சிங்கிள் பிரீமியம் திட்டம்

எல்.ஐ.சி. (LIC) நிறுவனத்தின் 'நிவேஷ் பிளஸ் பிளான் 850' (LIC Nivesh Plus Plan 850) திட்டத்தில் முதலீடு செய்வதற்கான நன்மைகள் மற்றும் அதன் விதிமுறைகள் குறித்த முழுமையான விவரங்களைத் தெரிந்துகொள்வோம். LIC நிவேஷ் பிளஸ் பிளான் 850 என்பது ஒருமுறை முதலீடு செய்யும் திட்டமாகும்.

ஒரே முறை பணம் செலுத்தி சேமிப்பதோடு மட்டுமல்லாமல், இன்சூரன்ஸ் பாதுகாப்பையும் தரும் திட்டமாகும். எனவே, பங்குச்சந்தை லாபத்துடன் சேர்த்து காப்பீடும் பெற நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். மற்ற LIC திட்டங்களைப் போல இல்லாமல், இத்திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் பணம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. இதனால் கிடைக்கும் வருமானம் நிலையானது என சொல்ல முடியாது என்றாலும், நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஃபண்டைப் பொறுத்து உங்களுடைய வருமானம் அமையும்.

24
4 ஃபண்ட் ஆப்ஷன்கள்:

இத்திட்டத்தில் முதலீட்டாளர்கள் தங்களின் இலக்கு மற்றும் அபாயத்தை எதிர்கொள்ளும் திறன் (Risk Tolerance) ஆகியவற்றிற்கு ஏற்ப 4 ஃபண்ட் ஆப்ஷன்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்:

பாண்ட் ஃபண்ட் (Bond Fund) - இதில் உங்களுடைய பணம் அரசு மற்றும் கார்ப்பரேட் பத்திரங்களில் மட்டுமே முதலீடு செய்யப்படும். இதில் ரிஸ்க் என்பது மிகக் குறைவு.

செக்யூர்டு ஃபண்ட் (Secured Fund) - இதில் உங்களுடைய பணம் பாண்டுகள் மற்றும் குறுகிய கால பண சந்தைகளில் முதலீடு செய்யப்படும். இதில் ரிஸ்க் குறைவாகவும் நடுத்தரமாகவும் இருக்கும்.

பேலன்ஸ்டு ஃபண்ட் (Balanced Fund) - இதில் உங்களுடைய பணம் கடன் பத்திரங்கள் மற்றும் பங்குச்சந்தையில் சமமாக முதலீடு செய்யப்படும். இதில் ரிஸ்க் நடுத்தர அளவில (Medium) இருக்கும்.

குரோத் ஃபண்ட் (Growth Fund) - இதில் அதிகளவிலான பணம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படும். இதில் ரிஸ்க் அதிகம் என்றாலும், நீண்ட கால முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு இது ஏற்றதாக இருக்கும். பாலிசி காலத்தில் முதலீட்டாளர்கள் ஆண்டுக்கு நான்கு முறை ஒரு ஃபண்டிலிருந்து மற்றொரு ஃபண்டிற்கு எந்தக் கட்டணமின்றி மாறிக்கொள்ளலாம்.

34
ஆயுள் காப்பீடு தேர்வுகள்

இத்திட்டத்தில் பாலிசிதாரர்கள் தங்களின் தேவைகளுக்கு ஏற்ப இரண்டு காப்பீட்டுத் தேர்வுகளில் ஏதேனும் ஒன்றை thentheuthukollalam:

ஆப்ஷன் 1 - நீங்கள் ஒரே தவணையாக செலுத்தும் தொகையை விட 1.25 மடங்கு காப்பீட்டுத் தொகை பெற விரும்பினால் இதனைத் தேர்வு செய்யலாம்.

ஆப்ஷன் 2 - நீங்கள் செலுத்தும் பிரீமியம் தொகையை விட 10 மடங்கு பணம் வேண்டும் என நினைத்தால் இதனைத் தேர்வு செய்யலாம்.

44
முக்கிய விதிகள்

பாலிசி எடுத்த முதல் 5 ஆண்டுகளுக்கு நீங்கள் பணத்தை எடுக்கவோ அல்லது பாலிசியை ரத்து செய்யவோ முடியாது. இது பங்குச்சந்தை சார்ந்த திட்டம் என்பதால், வங்கி ஃபிக்சட் டெபாசிட் (FD) போல இதில் நிலையான வருமானத்தை எதிர்பார்க்க முடியாது. சந்தையின் ஏற்ற இறக்கங்களைப் பொறுத்தே லாபம் அமையும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories