இதுக்கு ஒரு எண்டே கிடையாதா? ரூ.70000ஐ கடந்து வரலாற்றில் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை

Published : Apr 12, 2025, 10:30 AM IST

இந்தியாவில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.70000ஐ கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

PREV
13
இதுக்கு ஒரு எண்டே கிடையாதா? ரூ.70000ஐ கடந்து வரலாற்றில் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து உலக அரங்கில் பல்வேறு நாடுகளுக்கும் எதிராக கண்மூடித் தனமாக வரி விதித்ததன் விளைவாக பல்வேறு பொருட்களின் விலையும் சீரற்ற நிலையில் ஏற்ற, இறக்கத்தைச் சந்தித்து வருகின்றன. அந்த வகையில் தங்கம் இன்று புதிய உச்சத்தைத் தொட்டு சாமானியர்கள், ஏழை மக்களின் மனதில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

23
Gold New Woman

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை

அதன்படி இந்தியாவில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.70000ஐக் கடந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.25 உயர்ந்து கிராம் ரூபாய் 8770க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூபாய் 70160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 

33
Gold Couple

4 நாட்களில் உயர்ந்த தங்கம் விலை

கடந்த சில தினங்களுக்கு முன்பு சற்று இறக்கம் கண்ட தங்கத்தின் விலை கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.4360 உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தங்கத்தின் விலை இத்துடன் நின்று விடாமல் தொடர்ந்து அதிகரிக்கக் கூடும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories