Pension planning
பணி ஓய்வுக்குப் பிறகு ஒரு பெரிய ஓய்வூதியத்தைப் பெற விரும்பினால், தேசிய ஓய்வூதிய திட்டத்தில் (NPS) முதலீடு செய்வது நல்ல தேர்வாக இருக்கும். 40 வயதில் முதலீடு செய்யத் தொடங்கினால், ஓய்வுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் ரூ.50 ஆயிரம் ஓய்வூதியமாகப் பெறலாம்.
National Pension System
ஒவ்வொருவரும் ஓய்வு பெற்ற பிறகு நிலையான வருமானத்திற்காக, மக்கள் வெவ்வேறு திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். குறிப்பாக பெரும்பாலான மக்கள் ஓய்வூதிய திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். ஓய்வுக்குப் பிறகு நீங்கள் அதிக ஓய்வூதியத்தைப் பெற விரும்பினால், என்பிஎஸ் (NPS) எனப்படும் தேசிய ஓய்வூதிய திட்டம் உங்களுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
NPS Benefits
தேசிய ஓய்வூதியத் திட்டம் ஒரு அரசாங்கத் திட்டமாகும். இது சந்தையுடன் இணைக்கப்பட்ட திட்டம் ஆகும். எனவே இதில் கிடைக்கும் வருமானம் சந்தையை அடிப்படையாகக் கொண்டது. இந்தத் திட்டம் உங்களுக்கு ஓய்வூதியப் பலனைத் தருவதோடு, ஒரு பெரிய தொகையையும் மொத்தமாக வழங்குகிறது. உங்கள் 40 வயதில் முதலீடு செய்யத் தொடங்கினால், 50,000 ரூபாய் ஓய்வூதியத்தைப் பெறலாம். அதற்கு ஒவ்வொரு மாதமும் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
NPS investment
இத்திட்டத்தில் 18 முதல் 70 வயது வரை உள்ள எந்தவொரு இந்தியக் குடிமகனும் முதலீடு செய்யலாம். இத்திட்டத்தில் நீங்கள் எவ்வளவு முதலீடு செய்தாலும் அந்தப் பணம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படும். ஓய்வு பெறும்போது, முதலீட்டில் 60 சதவீத தொகையை மொத்தமாக எடுத்துக்கொள்ளலாம். மேலும் 40 சதவீதம் ஆண்டுத் தொகையாக முதலீடு செய்யப்படும். இந்த ஆண்டுத் தொகையிலிருந்து உங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும்.
Pension Schemes
இந்தத் திட்டம் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) இயக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் ரூ.50,000 மாதாந்திர ஓய்வூதியம் பெற விரும்பினால், 40 வயதில் முதலீட்டை ஆரம்பிக்க வேண்டும். மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.15,000 முதலீடு செய்ய வேண்டும். 65 வயது வரை இந்த முதலீட்டைச் செய்ய வேண்டும். அதாவது 25 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.15,000 முதலீடு செய்ய வேண்டும்.
Senior Citizen Pension Scheme
மாதம் ரூ.15,000 முதலீடு செய்தால் மொத்த முதலீடு ரூ.45 லட்சம் ஆக இருக்கும். இந்தத் தொகைக்கு 10 சதவீத வட்டி கிடைத்தால், வட்டியில் இருந்து ரூ.1,55,68,356 கிடைக்கும். இதன்படி, 45,00,000 + 1,55,68,356 = 2,00,68,356 ரூபாய்க்கான கார்பஸ் உருவாகிவிடும். இந்தத் தொகையில் 60 சதவீதம், அதாவது ரூ.1,20,41,013, மொத்தத் தொகையாக எடுத்துக்கொள்ளலாம். மீதமுள்ள 40 சதவீதம், அதாவது ரூ. 80,27,342, ஆண்டுத் தொகையாகச் செல்லும். இந்தத் தொகையில் 8 சதவீதம் வருமானம் கிடைக்கும் என்று வைத்துக்கொண்டால், மாத ஓய்வூதியம் ரூ.53,516 ஆக இருக்கும்.