இந்தியாவில் சுமார் 6.000 ரயில் நிலையங்களில் சக்கர நாற்காலில் வசதிகள் உள்ளன. ரயில் நிலையங்களில் மூத்த குடிமக்களுக்கு இலவச சக்கர நாற்காலிகள் வழங்கப்படுகின்றன. நடக்க சிரமப்படும் முதியவர்களுக்கு இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும். இதன்மூலம் ரயிலின் வாசல் வரை சென்று விட முடிகிறது.
உள்ளூர் ரயில்களில் சீட் கன்பார்ம்
சென்னையில் காலை மற்றும் மாலை நேரங்களில் புறநகர் மின்சார ரயில்களில் எதாவது அதிசயம் நடந்தால் தான் சீட் கிடைக்கும். டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற பெரு நகரங்களின் உள்ளூர் ரயில்களிலும் இதுதான் நிலைமை. இதனை கருத்தில் கொண்டு இந்தியன் ரயில்வே உள்ளூர் ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு தனி இருக்கைகள் வழங்குகிறது. இதனால் அவர்கள் நின்று கொண்ட பயணம் செய்ய வேண்டியதில்லை.
பேட்டரி கார்கள்
சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற முக்கிய ரயில் நிலையங்களில் பேட்டரி மூலம் இயக்கப்படும் கார்களை (கோல்ஃப் வண்டிகள்) மூத்த குடிமக்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.