SBI Green Rupee Term Deposit: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ), சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக Green Rupee Time Deposit என்ற புதிய பிக்சட் டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் 1,111, 1,777 மற்றும் 2,222 நாட்கள் என மூன்று வெவ்வேறு காலகட்டங்களுக்குக் கிடைக்கிறது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ), Green Rupee Time Deposit என்ற திட்டத்தை வழங்குகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இந்தப் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
28
SBI Green Rupee Term Deposit interest rate
சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டத்தை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் பெயர் SBI Green Rupee Time Deposit (SGRTD). சுற்றுச்சூழலுக்கு உகந்த (பசுமை) திட்டங்ககளில் முதலீட்டை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும்.
38
SBI Green Rupee Term Deposit maturity
இந்திய குடிமக்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் NRO கணக்கு வைத்திருப்பவர்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். எஸ்பிஐ இந்த திட்டத்தை 1,111 நாட்கள், 1,777 நாட்கள், 2,222 நாட்கள் என மூன்று வெவ்வேறு காலகட்டங்களுக்கு வழங்குகிறது.
48
SBI Green Rupee Term Deposit Options
ஆரம்பத்தில், இந்தத் திட்டத்தின் பலனை வங்கிக் கிளை மூலம் பெறலாம். விரைவில் இது YONO செயலி, இன்டர்நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் மூலமும் கிடைக்கும்.
58
SBI Green Rupee Term Deposit Eligibility
இந்த SBI கிரீன் FD திட்டத்தில் சாதாரண பிக்சட் டெபாசிட்டுக்குக் கிடைப்பதை விட சற்று குறைவான வட்டியை வழங்கப்படுகிறது. 1,111 நாட்களுக்கு 6.65%, 1,777 நாட்களுக்கு 6.65%, 2,222 நாட்களுக்கு 6.40% ஆண்டு வட்டி கிடைக்கும்.
68
SBI Green FD Scheme
இந்தத் திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்கள் அதிக வட்டி விகிதங்களைப் பெறுவார்கள். எஸ்பிஐ வங்கியில் ஏற்கனவே பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் கூடுதல் வட்டியின் பலனைப் பெறுவார்கள். இருப்பினும், NRI மூத்த குடிமக்கள் மற்றும் NRI ஊழியர்கள் இந்த கூடுதல் வட்டிக்கு தகுதி பெற மாட்டார்கள்.
78
SBI Green Rupee Term Deposit TDS rules
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு கடன் மற்றும் ஓவர் டிராஃப்ட் வசதி கிடைக்கும். இந்த வசதி பொதுவாக மற்ற பிக்சட் டெபாசிட் திட்டங்களிலும் கிடைக்கிறது. மேலும், இந்தத் திட்டத்திற்கு வருமான வரி விதிகளின்படி TDS பிடித்தம் பொருந்தும். முதலீட்டாளர்கள் தங்கள் வருமான வரித் திட்டத்தின்படி படிவம் 15G அல்லது 15H ஐ நிரப்ப வேண்டியிருக்கலாம்.
88
SBI Special Savings Scheme
இந்தத் திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முதலீடு செய்வது உத்தரவாதமான வருமானத்தைத் தரும். இது எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு எளிமையான மற்றும் பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்பை வழங்குகிறது.