ரூ.156 கோடிக்கு டீல்.. 2 தமிழக நிறுவனத்தை தட்டி தூக்கிய அம்பானி.. எந்தெந்த நிறுவனம்?

Published : Feb 11, 2026, 12:23 PM IST

ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புரோடக்ட்ஸ், தமிழகத்தின் முன்னணி ஆரோக்கிய உணவு நிறுவனமான மன்னா ஹெல்த் மிக்ஸை ரூ.156 கோடிக்கு வாங்கியுள்ளது.

PREV
14

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் ஆரோக்கியமான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனமாக இருந்து வருவது மன்னா ஹெல்த் மிக்ஸ் (Manna Health Mix). இதற்கு என்று தனி வாடிக்கையாளர்கள் கூட்டமே உள்ளது. சிறுதானியங்கள், ஓட்ஸ், மல்டிகிரெய்ன் பொருட்கள், ஹெல்த் மிக்ஸ்கள், காலை உணவு தானியங்கள் மற்றும் உலர் பழங்கள் உள்ளிட்ட பல ஆரோக்கியம் சார்ந்த உணவு வகைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறுதானிய மாவு, குழந்தை உணவு உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

24

இந்நிலையில் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புரோடக்ட்ஸ் லிமிடெட் தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி ஆரோக்கிய உணவு தயாரிப்பு நிறுவனமான மன்னா ஹெல்த் மிக்ஸ் நிறுவனத்தைக் ரூ. 156 கோடிக்கு வாங்கியுள்ளது.

34

சமீபத்தில் தான் உயர்தர பருப்பு வகைகளுக்கு பெயர் பெற்ற உதயம், இன்டிபென்டன்ஸ், சில் (SiL) உள்ளிட்ட நிறுவனங்களை ரிலையன்ஸ் வாங்கியிருந்த நிலையில் தற்போது இந்த பட்டியலில் மன்னா ஹெல்த் மிக்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்து இதுவரையில் 3 பெரிய மற்றும் பிரபலமான நிறுவனங்களை முகேஷ் அம்பானி கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மக்களின் வாழ்க்கை முறையும் உணவு பழக்க வழக்கங்களும் வேகமாக மாறி வரும் நிலையில் ஆரோக்கியமான உணவு, சத்து நிறைந்த பொருட்களுக்கான தேவையும் சமீப காலமாக அதிகரித்து வருவதன் காரணமாகவே இதுபோன்ற நிறுவனங்களை வாங்கி வருகிறது.

44

இதுதொடர்பாக ரிலையன்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஆரோக்கிய உணவுகள் சந்தையில் புகழ்பெற்ற 'மன்னா' (Manna) பிராண்ட் இனி ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமாகச் செயல்படும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் FMCG பிரிவான RCPL ஏற்கனவே உதயம், இன்டிபென்டன்ஸ் மற்றும் சில் (SiL) போன்ற பிராண்டுகளைக் கொண்டுள்ள நிலையில், தற்போது மன்னா பிராண்டையும் தனது உணவுப் பட்டியலில் இணைத்துள்ளது.

உலகத்தரம் வாய்ந்த ஆரோக்கியமான உணவுகளை சாமானிய மக்களுக்கும் மலிவான விலையில் கிடைக்கச் செய்வதே ரிலையன்ஸ் நிறுவனத்தின் முக்கிய நோக்கம் என்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் டி. கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories