Ration Card: தொடர்ந்து 6 மாதங்கள் ரேஷன் பொருள் வாங்காதவர்களின் கார்டுகள் உடனே ரத்து செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக வந்துள்ள புதிய அப்டேட் குறித்து பார்ப்போம்.
இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் ரேஷன் கார்டு வைத்துள்ளனர். ஆனால், பல பேர் அரசுத் திட்டங்களுக்காக மட்டுமே கார்டைப் பயன்படுத்துகின்றனர்; ரேஷன் பொருட்களை வாங்குவது கிடையாது. இப்படிப்பட்ட கார்டுகள் மீது அரசு இப்போது அதிரடி நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளது.
புதிய விதிகளின்படி, தொடர்ந்து 6 மாதங்களாக ரேஷன் பொருட்களை வாங்காதவர்களின் கார்டுகளை மாநில அரசுகள் தற்காலிகமாக முடக்கி வைக்கும். அதாவது, தரவுத்தளத்திலிருந்து உடனே கார்டு நிரந்தரமாக நீக்கப்படாது. கொஞ்ச நாளைக்கு ரேஷன் வாங்குவது மட்டும் நிறுத்தப்படும். அதுக்கப்புறம் தகுதியைச் சரிபார்த்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பாங்க. 6 மாதம் வாங்கலைன்னா உடனே கார்டு கேன்சல் ஆகிடும்னு பயப்பட வேண்டாம். மத்திய அரசு இதற்கு மறுமதிப்பீடு செய்ய வாய்ப்பு கொடுத்துள்ளது.
24
இ-கேஒய்சி (e-KYC) முடிக்க 3 மாத அவகாசம்
தற்காலிகமாக முடக்கப்பட்ட கார்டுகளைத் திரும்ப இயக்க 3 மாத அவகாசம் கொடுக்கப்படும். இந்த நேரத்தில் இ-கேஒய்சி அப்டேட் செய்து, தேவையான ஆவணங்களைச் சரிபார்த்து உங்க தகுதியை நீங்கள் நிரூபிக்கலாம். தகுதி இருந்தால் கார்டு திரும்பவும் இயக்கப்பட்டுவிடும். ரேஷன் கார்டு தரவுத்தளத்தைச் சரியாகப் பராமரிக்கவும், போலி கார்டுகளை ஒழிக்கவும்தான் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன் மூலமாக உண்மையான பயனாளிகளுக்கு மட்டுமே திட்டங்கள் போய் சேரும்.
34
இ-கேஒய்சி ஏன் இவ்வளவு முக்கியம்?
ரேஷன் கார்டு பயனாளிகளைச் சரியாக அடையாளம் காண இ-கேஒய்சி ரொம்பவே முக்கியம். மத்திய அரசு வெளியிட்ட தகவலின்படி, 2026 ஜூலை 30-ம் தேதி நிலவரப்படி நாடு முழுக்க 90.64 சதவீத இ-கேஒய்சி பணிகள் முடிந்துள்ளன. இதுமட்டுமில்லாமல் மொபைல் நம்பர் இணைப்பதற்கும் புதிய வழிகாட்டுதல்களை அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலமாகக் கார்டுதாரரின் விவரங்கள், ஆதார் அடையாளம், தகுதி எல்லாவற்றையும் எளிதாகச் சரிபார்க்க முடியும். போலி கார்டுகளைக் கண்டுபிடிக்கவும் இது ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்.
இ-கேஒய்சி அப்டேட் செய்யப் பயனாளிகள் தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடையை அணுகலாம். நாடு முழுக்க ரேஷன் கடைகளில் இ-கேஒய்சி வசதியை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதுபோக 'Mera Ration' செயலி (App) மூலமாகவும் டிஜிட்டல் சேவைகளை உணவுத்துறை வழங்குகிறது. மொபைலில் ஆதார் விவரங்கள், முக அங்கீகாரம் (Face authentication) மூலமாக இதை முடிக்கலாம். ஆன்லைனில் சிரமம் இருந்தால், அருகில் உள்ள ரேஷன் கடை அல்லது இ-சேவை மையத்தை நீங்கள் அணுகலாம்.
ரேஷன் கார்டுதாரர்கள் இப்போ என்ன செய்யணும்?
உங்கள் குடும்பம் கடந்த 6 மாதமாக ரேஷன் வாங்கவில்லை என்றால், முதலில் உங்கள் கார்டு நிலையினை சரிபாருங்கள். இ-கேஒய்சி முடிந்துள்ளதா என்று பாருங்கள். தேவைப்பட்டால் அருகில் உள்ள ரேஷன் கடைக்குப் போய் இ-கேஒய்சி வேலையை முடித்துவிடுங்கள். 6 மாதம் ரேஷன் வாங்காத கார்டுகள் உடனே ரத்து ஆகாது. தற்காலிகமாக முடக்கி 3 மாத அவகாசம் கொடுப்பார்கள். அதனால் தகுதியான பயனாளிகள் தங்களது இ-கேஒய்சி, ஆதார் இணைப்பு, கார்டு நிலை ஆகியவற்றை ஒருமுறை சரிபார்த்துக் கொள்வது ரொம்ப நல்லது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.