Published : Nov 04, 2024, 08:02 AM ISTUpdated : Nov 04, 2024, 08:51 AM IST
அதிக லாபம் கொடுக்கும் பாதுகாப்பான முதலீட்டை நாடுபவர்களுக்கு போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும். இத்திட்டத்தில் வெறும் 1000 ரூபாயிலிருந்து முதலீடு செய்யலாம்.
தபால் அலுவலகத்தில் சாமானிய மக்களுக்கு நிதி பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல சேமிப்புத் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் அதிக லாபத்தை வழங்கும் திட்டம் டைம் டெபாசிட் திட்டம். இத்திட்டத்தில் 7.50% வரை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
25
1 lakh investment in Post Office
டைம் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன் எவ்வளவு காலத்திற்கு முதலீடு செய்யப்போகிறீர்கள் என்பதை முடிவு செய்ய வேண்டும். விருப்பமான முதலீட்டுக் காலத்தைத் தேர்வு செய்து கணக்கைத் தொடங்கலாம். குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்ச வரம்பு இல்லை.
35
Post Office Scheme Interest Rates
டைம் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்துக்கு ஒவ்வொரு காலாண்டிலும் வட்டி கிடைக்கும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்துக்கு வரிச்சலுகையும் உண்டு. வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C இன் கீழ் ரூ.1.50 லட்சம் வரை வரிவிலக்கும் பெற முடியும்.
இந்த திட்டத்தில் ஒரு லட்சம் ரூபாயை 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்று பார்க்கலாம். டைம் டெபாசிட் திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு 7.50% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. 5 வருடங்கள் கழித்து முதிர்வுத் தொகையாக 1,44,995 ரூபாய் கிடைக்கும். இதில் வட்டி மட்டும் 44,995 ரூபாய் ஆகும்.
55
Post Office Time Deposit Benefits
அருகில் உள்ள போஸ்ட் ஆபிஸ் கிளைக்குச் சென்று டைம் டெபாசிட் திட்டத்தில் சேரலாம். சேமித்த பணத்தைப் பெருக்க நினைக்கும் யார் வேண்டுமானாலும் டைம் டெபாசிட் கணக்கைத் தொடக்கலாம். பெற்றோர் தங்கள் குழந்தைகள் பெயரிலும் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம்.