வைப்பு நிதி
நகரம் முதல் கிராமம் வரை அனைத்து பெண்களும் பணத்தை முதலீடு செய்யக்கூடிய பல திட்டங்களை தபால் அலுவலகம் செயல்படுத்தி வருகிறது. பெண்கள் நிதி சுதந்ததிரத்துடன் தன்னம்பிக்கை உள்ளவர்களாக உருவாக இந்தத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் போஸ்ட் ஆபிஸ் வழங்கும் சிறப்புத் திட்டம் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ்.
தபால் அலுவலகம் மகிளா சம்மான் சான்றிதழ் திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு நல்ல வட்டியையும் பெறலாம். இத்திட்டத்தில் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வதன் மூலம், 2 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.2,32,044 கிடைக்கும். இந்த திட்டத்தை பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.
தபால் அலுவலக மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், பெண்கள் எந்தவிதமான சந்தை அபாயத்தையும் சந்திக்க வேண்டியதில்லை. இத்திட்டத்தின் மூலம் உத்தரவாதமான வருமானம் கிடைக்கும். இதில், பெண்கள் 2 ஆண்டுகளுக்கு அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இரண்டு ஆண்டுகளில் முதலீட்டுக்கு 7.5 சதவீதம் வட்டி விகிதம் கிடைக்கும்.
இந்தத் தபால் அலுவலகத் திட்டத்தில் டெபாசிட் செய்யப்படும் பணத்திற்கு பிரிவு 80C இன் கீழ் வரிவிலக்குகளையும் அரசு வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் அனைத்துப் பெண்களுக்கும் வரிச் சலுகை கிடைக்கும். இத்திட்டத்தின் கீழ், 10 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களும் தங்கள் கணக்கைத் திறக்கலாம். மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தின் கீழ், இரண்டு ஆண்டுகளுக்கு 7.5 சதவீத வட்டி வழங்கப்படும்.
ஒரு முறை ரூ.2 லட்சத்தை முதலீடு செய்தால், முதல் ஆண்டில் ரூ.15,000 மற்றும் இரண்டாம் ஆண்டில் ரூ.17,044 வருமானம் கிடைக்கும். அதாவது, இரண்டு ஆண்டுகளில் ரூ.2 லட்சம் முதலீட்டிற்கு ரூ.32,044 வட்டி கிடைக்கும். இதில் முதலீடு செய்யும் பெண்கள் முதிர்வு காலத்தில், அதாவது 2 வருடத்திற்கு பிறகு, ரூ.2,32,044 பணத்தைப் பெறுவார்கள்.