ஒரே ஒரு முதலீடு.. வேலைக்கே போக வேண்டாம்.. மாசம் 9,000 சொளையா வரும்.. போஸ்ட் ஆபீஸின் 'மேஜிக்' திட்டம்!

Published : Apr 12, 2026, 11:51 AM IST

Post Office Monthly Income Scheme: நீங்கள் ஒருமுறை முதலீடு செய்தால் மாதம் ரூ.9,000 வருமானம் வரும் போஸ்ட் ஆபிசின் சூப்பர் திட்டம் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

PREV
14
சேமிப்பு முக்கியம்

இன்றைய காலகட்டத்தில் பணம் ஒரு முக்கிய தேவையாக உள்ளது. ஒரு குடும்பத்தில் ஆணும் பெண்ணும் வேலைக்கு போனால் தான் பிழைப்பு நடத்த முடியும் என்ற சூழ்நிலை நிலவி வருகிறது. பலரும் பல்வேறு வகையில் தங்களது உழைப்பை கொட்டி பணத்தை ஈட்டி வருகின்றனர். பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் சம்பாதித்த பணத்தை சேமிப்பது. இன்றைய சேமிப்பு எதிர்காலத்தில் நமக்கோ அல்லது நமது குழந்தைகளுக்கோ மிகவும் கை கொடுக்கும்.

24
போஸ்ட் ஆபீசின் சூப்பர் திட்டம்

அந்த வகையில் பணத்தை சேமிக்க உதவும் போஸ்ட் ஆபீசின் நிலையான மாத வருமான திட்டம் பற்றி இந்த செய்தியில் பார்ப்போம். ஒரு தொகையை முதலீடு செய்து அதன் மூலம் நிலையான மாத வருமானத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு அஞ்சல் அலுவலக மாத வருமான திட்டம் (Post Office MIS) மிகச் சிறந்த தேர்வாக இருக்கும். இது மத்திய அரசின் ஆதரவு பெற்ற ஒரு சிறு சேமிப்பு திட்டம். இந்த திட்டத்தின்படி (POMIS) நீங்கள் ஒரு முறை தொகையை டெபாசிட் செய்தால் போதும் பின்னர் வட்டி வடிவில் உங்களுக்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட வருமானம் வந்து கொண்டிருக்கும்.

நிலையான மாத வருமானம் கிடைக்கும்

அதாவது நமது சேமிப்பிலிருந்து நிலையான மாத வருமான வேண்டும் என எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அஞ்சல் அலுவலக மாத வருமான திட்டம் முடிவு காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். இந்த கால முழுவதும் முதலீடு செய்யும் தொகைக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் நிலையான வட்டி வருமானம் தொடர்ந்து வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சமே ஐந்து ஆண்டு முதிர்வு காலம் நிறைவடைந்ததும் நீங்கள் முதலீடு செய்த முழு பணமும் உங்களுக்கு திரும்ப கிடைக்கும்.

34
எவ்வளவு தொகையை முதலீடு செய்யலாம்?

அதாவது நீங்கள் ஒரே ஒரு முறை மட்டும் முதலீட்டுத் தொகையை செலுத்தினால் போதும் அதன் பின்பு நீங்கள் செலுத்திய முதலீட்டின் மூலம் வருமானம் ஈட்டப்பட்டு ஒவ்வொரு மாதமும் தடையின்றி உங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டு கொண்டே இருக்கும். இந்தத் திட்டத்தில் எவ்வளவு தொகையை முதலீடு செய்யலாம்? என நீங்கள் கேட்கலாம். இந்த மாத வருமான திட்டம் மூலம் தனிநபர் கணக்கு மற்றும் கூட்டுக் கணக்கு எனப்படும் ஜாய்ன்ட் கணக்கு ஆகிய கணக்குகளை தொடங்கலாம்.

ஆண்டுக்கு எவ்வளவு வட்டி?

இந்த திட்டத்தில் குறைந்த முதலீடு செய்யப்படும் குறைந்தபட்ச தொகை ரூ.1,000 ஆகும். தனிநபர் கணக்கில் முதலீடு செய்வதற்கு அதிகபட்ச வரம்பு 9 லட்சம் ரூபாய் ஆகும். அதே வேளையில் ஜாயின்ட் கணக்கிற்கு அனுமதிக்கப்படும் அதிகபட்ச முதலீடு ரூபாய் 15 லட்சம் ஆகும். இப்போதைய நிலையில் இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு 7.40% வட்டி கிடைக்கிறது. இந்த வட்டி தொகை முதலீடு செய்பவர்களுக்கு மாத தவணையாக வழங்கப்பட்டு வருகிறது.

44
மாதம் எவ்வளவு வருமானம் கிடைக்கும்?

இந்தத் திட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச முதலீட்டு தொகையை நீங்கள் முதலீடு செய்யும்போது ஒவ்வொரு மாதமும் வட்டி வடிவில் உங்களுக்கு ரூபாய் 9,250 வருமானம் கிடைக்கும். உதாரணத்துக்கு ஒரு திருமணமான தம்பதி தங்கள் கையில் உள்ள மொத்த வருவாய் 14 லட்சம் ரூபாயை இந்த திட்டத்தில் முதலீடு செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் செய்த முதலீட்டின்படி ஆண்டுக்கு 7.40% வட்டி விகிதத்தின் படி கணக்கிட்டால் இந்த தம்பதிக்கு மாதம்தோறும் சுமார் ரூ.8,633 கிடைக்கும்.

முதலீட்டு தொகையும் திரும்ப கிடைக்கும்

ஐந்து ஆண்டு காலம் முழுவதும் இந்த மாதாந்திர தொகை அவர்களுக்கு கிடைத்துக் கொண்டே இருக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இந்த திட்டம் முடிவடைந்த உடன் அவர்கள் ஏற்கனவே செலுத்திய முதலீட்டு தொகை ரூ.14 லட்சம் திருப்பி வழங்கப்படும். இதேபோல் கூட்டுக்கணக்கில் 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 7.40% வட்டி அடிப்படையில் மாதம்தோறும் 9,250 கிடைக்கும். ஐந்து ஆண்டுகளில் மொத்தம் வருமானம் 5,55,000 ஆகும். நீங்கள் மாதந்தோறும் நிலையான வருமானத்தை எதிர்பார்த்தால் என்று இந்த திட்டம் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories