Petrol Diesel Price Hike: அதிகாலையில் பேரதிர்ச்சி! 10 நாட்களில் 3வது முறையாக! பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு.

Published : May 23, 2026, 07:50 AM IST

Petrol Diesel Price: சர்வதேச சந்தை நிலவரங்களால் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களில் 3வது முறையாக விலை உயர்த்தப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.

PREV
15
போர் பதற்றத்தால் சிலிண்டர் தட்டுப்பாடு

கடந்த சில ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் உயர்த்தப்பட்டாமல் இருந்து வந்தது. இந்நிலையில் ஈரான்- அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக மேற்காசிய நாடுகளில் கடந்த இரண்டு மாதங்களாக போர் பதற்றம் நீடித்து வந்தது. இதன் காரணமாக சிலிண்டர் மற்றும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது.

25
4 ஆண்டுகளுக்கு பிறகு பெட்ரோல் டீசல் விலை உயர்வு

தற்போது போர் பதற்றம் இல்லாத நிலையில், ஈரான் பகுதியில் உள்ள ஹார்மூஸ் நீர் ஜலசந்தி பகுதியை அமெரிக்க முற்றுகையிட்டுள்ளது. இதனால் ஈரான் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து பெட்ரோல் மற்றும் எரிவாயு மற்ற நாடுகளுக்கு கொண்டு செல்வது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தில் ஒரு பகுதியை ஈடுகட்ட கடந்த 15-ம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது.

35
ஏற்றம் இறக்கம் கண்டு வரும் பெட்ரோல் டீசல்

அதாவது சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.3 உயர்த்தப்பட்டது. அடுத்தாக கடந்த மே 19ம் தேதி பெட்ரோல் டீசலுக்கு 90 காசுகள் உயர்ந்தது. நேற்று முன்தினம் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 35 காசுகள் குறைந்த நிலையில், நேற்று மேலும் 6 காசுகள் குறைந்தது. பின்னர் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வந்தது.

45
மீண்டும் பெட்ரோல் டீசல் உயர்வால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

இந்நிலையில் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 82 காசுகள் உயர்ந்து 105.31 ரூபாயாகவும், டீசல் விலை லிட்டருக்கு 87 காசுகள் உயர்ந்து 96.98 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாட்களில் பெட்ரோல் டீசல் விலை 3வது முறையாக உயர்ந்துள்ளது வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ஆட்டோ, கார் ஆகியவற்றின் வாடகை அதிகரிக்கப்பட்டது. உணவு பொருட்களின் விலையும் வரும் புதிய உச்சத்தை எட்ட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

55
பிரதமர் மோடி வலியுறுத்தல்

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவதன் மூலமும், வீட்டிலிருந்து வேலை செய்வதைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories