OneTag: பாஸ்டேக் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அனைவரும் நீண்ட நாள் எதிர்பார்த்த நல்ல செய்தி ஆகும். அது என்னவென்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
பாஸ்டேக் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒன்டேக் என்று அழைக்கப்படும் இந்த வசதி மூலம், காரின் முன்பக்க கண்ணாடியில் ஏற்கனவே ஒட்டப்பட்டிருக்கும் பாஸ்டேக்-ஐ மாற்றாமலேயே, அந்த பாஸ்டேக்கை வழங்கிய வங்கியை மட்டும் மாற்றிக்கொள்ள முடியும். இந்த வசதி தற்போது ராஜ்மார்க்யாத்ரா செயலியில் வழங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 11, 2026 அன்று மும்பையில் நடைபெற்ற உலக நிதிநுட்ப மாநாட்டில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்த வசதியை அறிமுகம் செய்தார்.
27
பாஸ்டேக் பயன்படுத்துபவர்கள்
இதன் மூலம் பாஸ்டேக் பயன்படுத்துபவர்கள் தங்களுக்கு ஏற்ற வங்கியை தேர்வு செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. இதுவரை வங்கியை மாற்ற வேண்டுமென்றால் புதிய பாஸ்டேக் பெற வேண்டிய நிலை இருந்தது. இனி அந்த தேவையை குறைக்க முடியும். நாட்டில் பாஸ்டேக் பயன்பாடு 98 சதவீதத்துக்கு அதிகமாக இருப்பதாகவும், சுமார் 13 கோடி பாஸ்டேக்குகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
37
ஒன்டேக் வசதி
ஒன்டேக் வசதியை பயன்படுத்துவதற்கான நடைமுறையும் எளிமையாக உள்ளது. முதலில் பாஸ்டேக் பயனர் ராஜ்மார்க்யாத்ரா செயலியில் தங்களது வாகனப் பதிவு எண்ணை உள்ளிட்டு, வங்கியை மாற்றுவதற்கான தகுதி உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். தகுதி இருந்தால், தற்போதைய பாஸ்டேக் வழங்கிய வங்கியிடமிருந்து 6 இலக்க கைபேசி சரிபார்ப்பு குறியீடு கிடைக்கும். அந்த குறியீட்டின் மூலம் வங்கி மாற்றத்துக்கு ஒப்புதல் அளித்த பிறகு, பயனர் விரும்பும் புதிய வங்கியைத் தேர்வு செய்யலாம்.
அதன்பிறகு புதிய வங்கியில் வாடிக்கையாளர் சரிபார்ப்பு மற்றும் கணக்கு தொடங்கும் நடைமுறையை முடிக்க வேண்டும். இந்த செயல்முறை நிறைவடைந்தது, பழைய வங்கி அந்த பாஸ்ட் கணக்கை மூடுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும். பழைய கணக்கில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் பணம் இருந்தால், பொருந்தக்கூடிய கட்டணங்கள் மற்றும் கணக்கு சரிசெய்தல்கள் முடிந்த பிறகு அந்த தொகை பயனருக்கு திருப்பி வழங்கப்படும்.
57
வங்கியை மாற்றுவது
இந்த வசதியின் முக்கிய சிறப்பு என்னவென்றால், வங்கி மாறினாலும் வாகனத்தில் ஏற்கனவே ஒட்டப்பட்டிருக்கும் பாஸ்டேக் அடையாள எண் மாறாது. இதனால் புதிய பாஸ்டேக் ஸ்டிக்கரை வாங்கி காரின் கண்ணாடியில் மீண்டும் ஒட்ட வேண்டிய அவசியம் இருக்காது. குறிப்பாக தற்போதைய பாஸ்டேக் வழங்கிய வங்கியின் சேவை திருப்திகரமாக இல்லை அல்லது வேறு வங்கியின் சேவையை பயன்படுத்த விரும்புபவர்கள் இதன் மூலம் எளிதாக மாறிக்கொள்ளலாம். ஆனால் ஒரு முறை வங்கி மாற்றம் செய்த உடனேயே மீண்டும் மற்றொரு வங்கிக்கு மாற முடியாது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தகவலின்படி, மீண்டும் வங்கி மாற்றத்திற்கு 6 மாத கால இடைவெளி இருக்க வேண்டும். எனவே பாஸ்டேக் வங்கியை மாற்றுவதற்கு முன்பு, எந்த வங்கியின் சேவை தங்களுக்கு தொடர்ந்து தேவையாக இருக்கும் என்பதை யோசித்து முடிவு செய்வது நல்லது.
67
ஒன்டேக் வசதி
ஒன்டேக் வசதி வாகன ஓட்டிகளுக்கு மட்டுமல்ல, பாஸ்டேக் அமைப்பின் செயல்பாட்டு செலவுகளையும் குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை ஒருவர் பாஸ்டேக் வழங்கிய வங்கியை மாற்ற, புதிய பாஸ்டேக் தயாரித்து, அதை அனுப்பி, மீண்டும் வாகனத்தில் ஓட்ட வேண்டிய நிலை காணப்பட்டது. இனி அதே பாஸ்டேக்-ஐ தொடர்ந்து பயன்படுத்தி வங்கியை மட்டும் மாற்ற முடிவதால், புதிய ஸ்டிக்கர் தயாரித்தல் மற்றும் அனுப்புதல் போன்ற தேவையற்ற செயல்முறைகள் குறையும். ராஜ்மார்க்யாத்ரா செயலியில் பாஸ்டேக் தொடர்பான பல்வேறு சேவைகளும் கிடைக்கின்றன. இதனுடன் பாஸ்டேக் ஆண்டு கட்டண வசதி, உள்ளூர் சாலை கட்டணச் சலுகை உள்ளிட்ட சேவைகளையும் பயனர்கள் பயன்படுத்த முடியும். தேசிய நெடுஞ்சாலைகளில் அவசர உதவி தேவைப்படும் நேரங்களில் 1033 என்ற உதவி எண்ணையும் பயன்படுத்தலாம்.
77
வாகன உரிமையாளர்கள்
மொத்தத்தில், பாஸ்டேக் பயன்படுத்தும் வாகன உரிமையாளர்களுக்கு ஒன்டேக் வசதி நடைமுறையில் பயனுள்ள மாற்றமாக உள்ளது. குறிப்பாக வங்கியை மாற்றுவதற்காக ஒவ்வொரு முறையும் புதிய பாஸ்டேக் வாங்கி, பழைய ஸ்டிக்கர் அகற்றி, புதியதை ஒட்ட வேண்டிய சிரமம் இனி இருக்காது. ஏற்கனவே இருக்கும் பாஸ்டேக் அடையாள எண்ணை தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டே புதிய வங்கியின் சேவைக்கு மாற முடியும். இருப்பினும் வங்கி மாற்றம் செய்வதற்கு முன்பு பழைய பாஸ்டேக் கணக்கில் உள்ள பணம், நிலுவையில் இருக்கும் பரிவர்த்தனைகள் மற்றும் புதிய வங்கியின் சரிபார்ப்பு விதிமுறைகள் போன்றவற்றை சரிபார்ப்பது நல்லது. பாஸ்டேக் பயன்பாடு நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பயனர்கள் தங்களுக்கு ஏற்ற வங்கியை எளிதாக தேர்வு செய்யும் வகையில் ஒன்டேக் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.