ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தனது 'பே டே சேல்' சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகை 2026 ஜனவரி 1 வரை முன்பதிவு செய்யக் கிடைப்பதுடன், மொபைல் ஆப் முன்பதிவுகளுக்கு வசதிக் கட்டணம் தள்ளுபடி போன்ற கூடுதல் நன்மைகளையும் வழங்குகிறது.
புதிய ஆண்டை முன்னிட்டு விமானப் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தனது மாதந்திர ‘பே டே சேல்’ சலுகையை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ஆஃபர் மூலம், உள்நாட்டு விமான டிக்கெட்டுகள் ரூ.1,950 முதல் கிடைக்கின்றன. அதேபோல், சர்வதேச விமானப் பயண டிக்கெட்டுகள் ரூ.5,590 முதல் விற்பனை செய்யப்படுகின்றன. புத்தாண்டு பயண திட்டங்களை முன்னதாகவே உறுதி செய்ய நினைக்கும் பயணிகளுக்கு இது சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.
25
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
இந்த சலுகை டிக்கெட்டுகளை 2026 ஜனவரி 1-ஆம் தேதி வரை முன்பதிவு செய்யலாம். உள்நாட்டு பயணங்களுக்கு 2026 ஜனவரி 12 முதல் அக்டோபர் 10 வரை இந்த கட்டணங்கள் செல்லுபடியாகும். சர்வதேச விமானங்களுக்கு ஜனவரி 12 முதல் அக்டோபர் 31, 2026 வரை இந்த சலுகை விலை அமலில் இருக்கும். டிக்கெட்டுகளை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், மொபைல் ஆப் மற்றும் முக்கிய ஆன்லைன் டிக்கெட் தளங்கள் மூலம் முன்பதிவு செய்ய முடியும்.
35
குறைந்த கட்டண விமான பயணம்
பயணிகளுக்கு கூடுதல் நன்மைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொபைல் ஆப் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தால், வசதி கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. மேலும், இணையதளத்தில் net banking மூலம் பணம் செலுத்தினாலும் கூடுதல் கட்டணம் கிடையாது. குறைந்த சுமையுடன் பயணம் செய்யும் பயணிகளுக்காக ‘லைட் ஃபேர்’ என்ற புதிய கட்டணத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
லைட் கட்டணம் தேர்வு செய்பவர்கள் செக்-இன் பேக்கேஜ் இல்லாமல் பயணம் செய்யலாம். இருப்பினும், குறைந்த கட்டணத்தில் சாமான்கள் சேர்க்கும் வசதியும் உள்ளது. உள்நாட்டு விமானங்களுக்கு 15 கிலோ சுமைக்கு ரூ.1,500 என்றும், சர்வதேச விமானங்களுக்கு 20 கிலோ சுமைக்கு ரூ.2,500 என்றும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
55
புத்தாண்டு பயண சலுகை
மேலும், லாயல்டி உறுப்பினர்களுக்கு வணிக வகுப்பு டிக்கெட்டுகளில் 25% தள்ளுபடி வழங்கப்படுகிறது. EMI, Buy Now Pay later போன்ற எளிய கட்டண முறைகளும் உள்ளன. Tata NewPass Rewards உறுப்பினர்களுக்கு கூடுதலாக ரூ.250 வரை தள்ளுபடி கிடைக்கும். மாணவர்கள், மூத்த குடிமக்கள், ராணுவத்தினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் தனிச்சலுகைகள் வழங்கப்படுகின்றன.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.