Published : May 05, 2025, 01:41 PM ISTUpdated : May 05, 2025, 02:03 PM IST
சந்தையில் அதிக அளவில் போலி நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக ₹500 போலி நோட்டுகள் அதிகமாக புழக்கத்தில் விடப்படுகின்றன. வங்கிகளை அடையும் வரை இது தெரியாமல் போகிறது. அசல் ₹500 நோட்டுகளைப் போலவே வடிவமைக்கப்படுவதால், போலியை கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது. இதனால், போலி நோட்டுகளை கண்டுபிடிக்க புதிய செயலியை RBI அறிமுகப்படுத்தியுள்ளது.
சந்தையில் போலி ₹500 நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக மத்திய அரசு எச்சரிக்கிறது. CBI, SEBI, NIA போன்ற நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ₹500 நோட்டுகளைப் பெறும்போது கவனமாக இருக்க வேண்டும். சிறிய எழுத்துப் பிழையைக் கொண்டு போலி நோட்டுகளைக் கண்டறியலாம்.
24
RBI Mani Appன் பயன்கள்
ரிசர்வ் வங்கி புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. போலி நோட்டுகளைக் கண்டறிய MANI (மொபைல் உதவியுடன் நோட்டு அடையாளங்காட்டி) என்ற செயலியை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
34
கள்ள பணத்தை கண்டுபிடிப்பது எப்படி?
இந்த செயலியைப் பயன்படுத்துவது மிகவும் எளிது. கேமராவை இயக்கி ₹500 நோட்டை ஸ்கேன் செய்ய வேண்டும். நோட்டு அசலா அல்லது போலியா என்பதை செயலி உடனே காட்டும். இணைய இணைப்பு தேவையில்லை.
போலி ₹500 நோட்டுகளைக் கண்டறிய வேறு சில வழிகளும் உள்ளன. ரிசர்வ் வங்கி என்ற ஆங்கில எழுத்துக்களில் எழுத்துப் பிழை இருந்தால் அது போலி நோட்டு. நோட்டை சாய்க்கும்போது மினுமினுப்புக் கோட்டின் நிறம் மாறும்.