கடந்த ஒரு வார காலமாகவே தங்கம் விலை உயர்ந்துகொண்டே வருகிறது. விரைவில் இந்தியாவில் 10 கிராம் தங்கம் விலை 60000 ரூபாயை தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றைய நிலவரப்படி, தங்கம் சவரனுக்கு 160 உயர்ந்து விற்பனையானது. இது நகை வாங்குவோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
24
இன்றைய (மார்ச் 21) நிலவரப்படி, 24 காரட் ஆபரண தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.10 குறைந்து ரூ. 6,067 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஒரு சவரன் தங்கம் ரூ. 48,536க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
34
மேலும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.10 குறைந்து 5,570 ரூபாய் எனவும், சவரன் ஒன்றுக்கு ரூ.80 வரை உயர்ந்து ரூ.44,560 ஆகவும் விற்பனையாகிறது.
44
வெள்ளி விலையை பொறுத்தவரை, ஒரு கிராம் ரூ. 74.70 ஆக விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.74,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.