lpg cylinder booking new rules: நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என்ற வேறுபாடின்றி நாடு முழுவதும் வீட்டு உபயோக LPG சிலிண்டர் ரீஃபில் புக்கிங்கிற்கான இடைவெளி 45 நாட்களில் இருந்து 25 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறிப்பாக, கிராமப்புறங்களில் LPG சிலிண்டரை புக் செய்ய 45 நாட்கள் நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை இல்லை.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் புதிய உத்தரவின்படி, நாடு முழுவதும் வீட்டு உபயோக LPG சிலிண்டர் ரீஃபில் புக்கிங்கிற்கான இடைவெளி 45 நாட்களில் இருந்து 25 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
24
நகர்புறம் vs கிராமம்
கடந்த சில மாதங்களாக LPG விநியோகத்தில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக, நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் சிலிண்டர் புக்கிங்கிற்கான இடைவெளியில் வேறுபாடுகள் இருந்தன. அதன்படி, நகர்ப்புறங்களில் 25 நாட்களுக்கு ஒருமுறையும், கிராமப்புறங்களில் 45 நாட்களுக்கு ஒருமுறையும் வீட்டு உபயோக LPG சிலிண்டரை புக் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதனால், குறிப்பாக கிராமப்புறங்களில் சிலிண்டர் காலியான பிறகும் புதிய சிலிண்டரை உடனடியாக பதிவு செய்ய முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.
34
இனி 25 நாட்களில் புக்கிங் செய்யலாம்
உள்நாட்டில் LPG விநியோக நிலைமை மேம்பட்டுள்ளதுடன், நிலுவையில் இருந்த ரீஃபில் ஆர்டர்களும் கணிசமாகக் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என்ற வேறுபாடின்றி அனைத்து வீட்டு உபயோக LPG நுகர்வோரும் 25 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு ரீஃபில் சிலிண்டரை புக் செய்ய முடியும்.
இந்த புதிய மாற்றம், Indane, Bharatgas மற்றும் HP Gas உள்ளிட்ட நிறுவனங்களின் வீட்டு உபயோக LPG ரீஃபில் விநியோகத்துக்கு பொருந்தும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், புதிய விதிமுறையை நாடு முழுவதும் உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இதன் மூலம், ஒரு சிலிண்டரைப் பயன்படுத்தி முடித்த பிறகு அடுத்த சிலிண்டரை புக் செய்ய நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் குறையும். மேலும், LPG விநியோகம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகலாம்.
IndianOil-ன் அதிகாரப்பூர்வ தகவல்படி, LPG அவசர உதவி எண்ணாக 1906 வழங்கப்பட்டுள்ளது. இனி கிராமமா? நகரமா ? என்ற வித்தியாசமின்றி வீட்டு உபயோக LPG ரீஃபிலை 25 நாட்கள் இடைவெளியில் புக் செய்ய முடியும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.