LPG Booking New Rules: இன்னும் 5 நாட்கள்தான்.. அக்டோபர் 1 முதல் கேஸ் புக்கிங் விதி மாற்றம்! இந்த வேலையை செய்தால் மட்டுமே மானியம்!

Published : Sep 25, 2026, 02:12 PM IST

LPG Booking New Rules: அக்டோபர் 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் புக்கிங் விதிகளில் அரசு பெரிய மாற்றத்தை கொண்டு வருகிறது. இதை செய்யாவிட்டால் அதிக விலை கொடுத்து தான் சிலிண்டர் வாங்க வேண்டும். அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.

PREV
14
அக்டோபர் 1 முதல் கேஸ் புக்கிங் விதி மாற்றம்

இன்னும் 5 நாட்கள் தான் இருக்கு. அக்டோபர் 1 முதல் எல்பிஜி கேஸ் புக்கிங் விதிகளில் பெரிய மாற்றம் வரப்போகுது. இந்த புது விதியை பின்பற்றவில்லை என்றால் கேஸ் சிலிண்டர் கிடைப்பது கஷ்டம். அதிக விலை கொடுத்து தான் வாங்க வேண்டி வரும். அடுத்த மாதம் 1-ம் தேதி முதல் சமையல் எரிவாயுவுக்கு பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பை (BAA) அரசு கட்டாயமாக்கியுள்ளது.

24
எல்பிஜி சிலிண்டர் விதிகள்

அக்டோபர் 1 முதல் எல்பிஜி சிலிண்டர் புக்கிங் விதிகள் மாறுகிறது. மானிய விலையில் சமையல் எரிவாயு கிடைக்க வேண்டும் என்றால், ரீஃபில் புக் செய்ய பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பு கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது. அதனால் தாமதிக்காமல் உடனே இந்த வேலையை முடித்துவிடுங்கள். செப்டம்பர் 19 நிலவரப்படி, நாட்டில் உள்ள 27.43 கோடி வீட்டு கேஸ் வாடிக்கையாளர்கள் பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பை முடித்துவிட்டனர்.

Bank Customer Alert: 3 நாட்கள் வங்கி வேலைநிறுத்தம்! வாடிக்கையாளர்கள் இதை முன்கூட்டியே முடிச்சிடுங்க

34
கேஸ் புக்கிங் புதிய விதிகள்

நீங்கள் இன்னும் இந்த வேலையை செய்யவில்லை என்றால் உடனே செய்துவிடுங்கள். பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பை எப்படி செய்வது என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். IndianOil ONE, Hello BPCL மற்றும் HP Pay போன்ற மொபைல் ஆப்ஸ்கள் மூலமாக நீங்களே ஆதார் சரிபார்ப்பை முடித்துவிடலாம். இதுதவிர, கேஸ் ஏஜென்சி அலுவலகத்திற்கு சென்றும் இந்த வேலையை செய்யலாம்.

44
கேஸ் சிலிண்டர் மானியம்

வீடுகளில் பயன்படுத்தும் எல்பிஜி சிலிண்டர்களுக்கு அரசு இன்னும் மானியம் வழங்கி வருகிறது. செப்டம்பர் 2026 நிலவரப்படி, 14.2 கிலோ வீட்டு சிலிண்டருக்கு அரசு மறைமுகமாக 210 ரூபாய் மானியம் வழங்குகிறது. அதனால் உடனே ஆதார் சரிபார்ப்பை முடித்துவிடுங்கள். அப்போது தான் அதிக விலை கொடுத்து சிலிண்டர் வாங்க வேண்டிய நிலை வராது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories