குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கி வெற்றி பெறலாம்! வெறும் ரூ.15,000 போதும்!

Published : Mar 05, 2025, 09:33 AM ISTUpdated : Mar 05, 2025, 10:23 AM IST

Low investment business ideas: அதானியும் அம்பானியும் எந்தத் தொழிலைச் செய்தாலும் வெற்றி பெறுவது எப்படி? விடாமுயற்சி, கடின உழைப்பு, புத்திசாலித்தனம் அனைத்தும் சேர்ந்து 100 சதவீதம் வெற்றியைக் கொடுக்கின்றன. நீங்களும் தொழிலில் வெற்றிபெற உறுதியாக இருந்தால், வெறும் 15,000 ரூபாய் போதும். இங்கே குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு தொழிலிலும் நீங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். அந்த தொழில்கள் எவை என்று பார்ப்போம்.

PREV
16
குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கி வெற்றி பெறலாம்! வெறும் ரூ.15,000 போதும்!
Low investment business ideas

இப்போது ஸ்டார்ட்அப் பிசினஸ்களில் பலர் ஆர்வம் காட்டுகின்றனர். பலர் ரிஸ்க் எடுத்து புதிதாக ஏதாவது தொழில் தொடங்கலாம் என்று நினைக்கிறார்கள். சிலர் வேலையுடன் சேர்த்து கூடுதல் வருமானம் பெற பிசினஸ் தொடங்கலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் எல்லாவற்றையும் விட முக்கியமாக பேஷன் மற்றும் திறமைக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நீங்கள் எந்த பிசினஸிலும் வெற்றி பெற முடியும். பிசினஸில் இறங்கும் முன் மார்க்கெட் அனாலிசிஸ் செய்வது மிகவும் முக்கியம்.

26
Business with Rs. 15,000

இப்போதைய சூழ்நிலையில் எந்த பொருளுக்கு டிமாண்ட் உள்ளது, எந்த மாதிரியான சேவையை வாடிக்கையாளர்கள் அதிகமாக விரும்புகிறார்கள் என்பதில் கவனம் செலுத்தி வியாபாரத்தில் இறங்குவது நல்லது. உங்களுக்கு தெளிவு இருந்தால் குறைந்த பணத்தில் கூட பிசினஸ் ஆரம்பிக்கலாம். உங்களிடம் வெறும் 15 ஆயிரம் ரூபாய் இருந்தால் போதும். கடை ஏதும் திறக்கமாலே வியாபாரம் செய்யலாம். அப்படிப்பட்ட பிசினஸ் ஐடியாக்களை இப்போது பார்க்கலாம்.

மார்க்கெட்டில் ஊறுகாய், அப்பளத்திற்கு கூட அதிக டிமாண்ட் உள்ளது. வெறும் 15 ஆயிரம் ரூபாயில் இந்த பிசினஸ் தொடங்கலாம். ஸ்மார்ட்போன் ரிப்பேரிங் கூட ஆன்லைனில் செய்யலாம். ஆர்டர் எடுத்து வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே சென்று ரிப்பேர் செய்யலாம். இதற்கு முதலில் நீங்கள் செல்போன் ரிப்பேரிங் கற்று இருக்க வேண்டும். 

36
E-commerce platforms

இ-காமர்ஸ்:

அமேசான், பிளிப்கார்ட் அல்லது மீஷோ போன்ற இ-காமர்ஸ் பிளாட்ஃபார்ம்ஸ் உள்ளன. இந்த பிளாட்ஃபார்ம்ஸை ஷாப்பைப் போல யூஸ் செய்து ப்ராடக்ட்ஸ் விற்க ஆரம்பிக்கலாம். அவர்களின் ப்ராடக்ட்ஸ்-ஐ நீங்கள் பிரபலம் செய்து உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு விற்கலாம். உங்களுக்கு ஸ்கில் இருந்தால் இன்வெஸ்ட்மென்ட் கூட தேவையில்லை. முதலில் ஆர்டர் எடுத்து அவர்களின் பணத்திலேயே வாங்கி அவர்களுக்கு டெலிவரி செய்யலாம். அல்லது முதலில் சில ஐட்டம்ஸ் நீங்கள் வாங்கி உங்கள் அருகில் வைத்துக்கொண்டு அவற்றை பிரபலம் செய்து வெறும் மணிநேரங்கள் அல்லது குறைந்த நாட்களில் டெலிவரி செய்து உங்கள் கஸ்டமர்களிடம் மார்க் வாங்கலாம். இதனால் உங்கள் வியாபாரம் வேகமாக டெவலப் ஆகும். 

46
Freelancing

ஃப்ரீலான்சிங்

ஃப்ரீலான்சிங் கூட குறைந்த முதலீட்டில் செய்யும் வியாபாரமே. நீங்கள் தேர்ந்தெடுத்த துறையில் எதற்காவது நிறைய டிமாண்ட் இருக்கிறதா என்பதை கவனித்து, அதை முன்னரே தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக கன்டென்ட் ரைட்டிங், புகைப்படங்கள், கிராபிக் டிசைன் போன்றவற்றில் இதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது. சில படைப்புகள் உங்கள் கையில் தயாராக இருந்தால் விருப்பம் உள்ளவர்கள் அவற்றை வாங்கிக்கொண்டு பணம் கொடுப்பார்கள்.

56
Gardening

வீட்டு தோட்டம்

பலர் வீட்டில் தோட்டம் போடுகிறார்கள். வீட்டு தோட்டம், காய்கறி தோட்டம் இப்போது மிகவும் ஃபேமஸ். அதற்கு தேவையான பொருட்களை ஆன்லைனில் விற்கலாம். தோட்டம் அமைப்பதற்கான எல்லாவற்றையும் எடுத்துச் சென்று வாடிக்கையாளர்களின் வீட்டு மொட்டை மாடியில் தோட்டம் ஏற்படுத்திக் கொடுக்கலாம். இதுகூட ஸ்பாட் பேமெண்ட் கிடைக்கக்கூடிய தொழிலாகும். அதுவும் குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய பிசினஸ்.

66
Online orders

ஆன்லைன் ஆர்டர்

உணவுக்கு எப்போதும் டிமாண்ட் இருக்கும். ஆன்லைனில் ரெஸ்டாரண்ட் ஸ்டார்ட் செய்யலாம். அதாவது கிளவுட் கிச்சன். ஆன்லைனில் ஆர்டர் எடுத்து சமைத்து டெலிவரி செய்ய வேண்டும்.

குறைந்த முதலீட்டில் பொது சேவை மையம் ஆரம்பிக்கலாம். ஆதார், பான் கார்டு, அரசுத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்க மக்களுக்குத் தேவையான வேலைகளைச் செய்து கொடுக்கலாம்.

குறிப்பு: எந்த பிசினஸ் ஸ்டார்ட் செய்யும் முன் நிபுணர்களின் ஆலோசனையையும் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories