ஷாருக்கானை மிஞ்சிய அமிதாப் பச்சன்! வருமான வரி மட்டும் ரூ.120 கோடி!

பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் இந்த ஆண்டு மற்றொரு சாதனையை முறியடித்துள்ளார். 82 வயதான அமிதாப் ஷாருக்கானை முந்தி 2024–2025 நிதியாண்டில் இந்தியாவில் அதிக வரி செலுத்தும் பிரபலமாக மாறியுள்ளார்.

List of highest taxpayers: Amitabh Bachchan tops the list - Rs. 120 crore tax sgb
Amitabh Bachchan become highest taxpayer

பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் இந்த ஆண்டு மற்றொரு சாதனையை முறியடித்துள்ளார். 82 வயதான அமிதாப் ஷாருக்கானை முந்தி 2024–2025 நிதியாண்டில் இந்தியாவில் அதிக வரி செலுத்தும் பிரபலமாக மாறியுள்ளார். அதிக சம்பளம் வாங்கும் அமிதாப் பச்சன், ரூ.92 கோடி வரி செலுத்திய ஷாருக்கானை முந்தியுள்ளார். 2024–25 நிதியாண்டில் ரூ.120 கோடி வரி செலுத்திய அமிதாப் பச்சன் ரூ.350 கோடி வருவாயை ஈட்டியதாகக் கூறப்படுகிறது.

List of highest taxpayers: Amitabh Bachchan tops the list - Rs. 120 crore tax sgb
Amitabh Bachchan Salary

இந்திய சினிமாவின் மிகப்பெரிய திரைப்படங்களில் நடித்துள்ள அமிதாப் பச்சன் பல பிராண்டுகளுக்கு சிறந்த விளம்பர முகமாகவும் இருக்கிறார். இதன் மூலம் அவர் 82 வயதிலும் மார்க்கெட் குறையாத நடிகராக உள்ளார். 'கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் முத்திரை பதித்துள்ளார். இத்தனை வழிகளில் சம்பாதிக்கும் அமிதாப் ரூ.350 கோடி வருமானம் ஈட்டியுள்ளார் என்று கூறப்படுகிறது.


Amitabh Bachchan Income Tax

கடந்த ஆண்டு ஷாருக்கான் ரூ.92 கோடி வரி செலுத்தி, அதிக வருமான வரி கட்டிய பிரபலமாக இருந்தார். இந்த ஆண்டு அதிக வரி செலுத்தும் இந்திய பிரபலங்களின் பட்டியலில் ஷாருக்கானை அமிதாப் பச்சன் மிஞ்சிவிட்டார். ஷாரூக்கைவிட 30% அதிக வரி செலுத்தியுள்ளார். போன வருடம் நான்காவது இடத்தில் இருந்த அமிதாப் இந்த ஆண்டு முதலிடத்தைப் பிடித்துவிட்டார். இது தவிர டாப் லிஸ்டில் இன்னும் இரண்டு நடிகர்கள் உள்ளனர். விஜய் ரூ.80 கோடி, சல்மான் கார் ரூ.75 கோடி வரி செலுத்தியுள்ளர்.

Amitabh Bachchan New Worth

அமிதாப் பச்சனின் பன்முகப்படுத்தப்பட்ட வருமான ஆதாரங்களில் பிளாக்பஸ்டர் திரைப்படங்கள், ஏராளமான பிராண்ட் விளம்பரங்கள் ஆகியவை உள்ளன. மேலும் மிகவும் பிரபலமான விளையாட்டு நிகழ்ச்சியின் 'கோன் பனேகா குரோர்பதி' தொகுப்பாளராகவும் சம்பாதித்து வருகிறார்.

Amitabh Bachchan Latest News

அமிதாப் பச்சன் தற்போது 'கோன் பனேகா குரோர்பதி' சீசன் 16 இன் தொகுப்பாளராக பார்வையாளர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் 'கல்கி 2898 AD', 'வேட்டையன்' ஆகிய படங்களில் நடித்தார். முப்பது ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு அவர் ரஜினிகாந்துடன் சேர்ந்து நடித்திருக்கிறார். கல்கி 2898 AD இன் தொடர்ச்சியான இன்னொரு படத்திலும், ரிபு தாஸ்குப்தாவின் 'செக்ஷன் 84' படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார்.

Latest Videos

click me!