இந்த பாலிசி எடுத்தா மாதம் ரூ.12,000 பென்ஷன் வரும்! எல்ஐசியின் சூப்பர் திட்டம்!

First Published | Oct 3, 2024, 9:05 AM IST

எல்ஐசி சாரல் ஓய்வூதியத் திட்டம் பணி ஓய்வுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் கணிசமான தொகையை வருமானமாகப் பெறுவதற்கு உத்தரவாதம் அளிக்கிறது. இதற்காக இந்த பாலிசியில் ஒரே ஒரு முறை மட்டும் முதலீடு செய்தால் போதும். வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் கிடைக்கும்.

LIC pension plan

ஓய்வுக்குப் பிறகு, முதுமையில் பொருளாதார பலத்துடன் இருக்க நிலையான மாத வருமானம் தேவைப்படுகிறது. இன்று இதற்காக மக்கள் பங்குச்சந்தையிலும் அரசாங்கத் திட்டங்களிலும் முதலீடு செய்கிறார்கள். பங்குச்சந்தையில் உள்ள ரிஸ்க் காரணமாக பெரும்பாலானவர்கள் அரசு திட்டங்களையே தேர்வு செய்கின்றனர்.

நீங்களும் ரிஸ்க் எடுக்க விரும்பாமல், நிலையான ஓய்வூதியத் தொகையை பெற நினைத்தால், எல்ஐசியின் பென்ஷன் திட்டம் பொருத்தமாக இருக்கும். எல்ஐசி சரள் ஓய்வூதியத் திட்டம் பாலிசிதாரர்கள் பணி ஓய்வு பெற்ற பின், வாழ்நாள் முழுவதும் நிலையான பென்ஷன் கிடைக்க உத்தரவாதம் அளிக்கிறது.

Latest Videos


எல்ஐசி சரள் ஓய்வூதியத் திட்டத்தில் ஒரு முறை மட்டுமே முதலீடு செய்தால் போதும். ஆனால், வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியத்தைப் பெறுலாம். இது இத்திட்டத்தின் சிறப்பு அம்சம் ஆகும். பிரபலமான பென்ஷன் திட்டமாக உள்ள எல்ஐசி சரள் ஓய்வூதியத் திட்டம் ஒவ்வொரு மாதமும் 12,000 ரூபாய் ஓய்வூதியம் பெற உதவுகிறது.

LIC Policy for Children- Get Rs 8.5 Lakh Return at Maturity if You Invest Rs 150 Daily

ஒருவர் தனியார் துறையிலோ அல்லது அரசுத் துறையிலோ பணிபுரிந்து ஓய்வு பெறுவதற்கு முன் பிஎஃப் நிதி மற்றும் கிராஜுவிட்டி தொகையை இதில் முதலீடு செய்தால், வாழ்நாள் முழுவதும் உறுதியான மாதாந்திர வருமானத்தை ஈட்டலாம்.

எல்ஐசியின் இந்தத் திட்டத்தில் 40 வயதுக்குட்பட்டவர்கள் முதலீடு செய்ய முடியாது. அதே நேரத்தில், 80 வயது வரை உள்ளவர்கள் எந்த நேரத்திலும் இந்தப் பாலிசியில் முதலீடு செய்யலாம். இந்தப் பாலிசியின் கீழ், ஆண்டுத் தொகையாக ரூ. 1000 மாதந்தோறும் வாங்க வேண்டும். அதே நேரத்தில், குறைந்தபட்சம் ரூ.3000 காலாண்டு அடிப்படையிலும், ரூ.6000 அரையாண்டு அடிப்படையிலும், ரூ.12000 ஆண்டு அடிப்படையிலும் எடுக்க வேண்டும்.

ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.12,000 வருடாந்திர தொகையை வாங்கலாம். இந்தத் திட்டத்தின் கீழ் அதிகபட்ச முதலீட்டு வரம்பு எதுவும் இல்லை. எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். எல்ஐசி கால்குலேட்டரின் படி, 42 வயதுடைய ஒருவர் ஆண்டுத் தொகையாக ரூ.30 லட்சம் பாலிசி எடுத்தால், அவருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.12,388 ஓய்வூதியம் கிடைக்கும்.

मिलता है ग्रेस पीरियडआम तौर पर समय पर प्रीमियम का भुगतान नहीं किए जाने पर एलआईसी उसे ग्रेस पीरियड में ट्रांसफर कर देती हैं। 6 महीने या सालाना प्रीमियम का भुगतान करने वालों के लिए 30 दिन का ग्रेस पीरियड देती है। मंथली प्रीमियम होने पर 15 दिन का ग्रेस पीरियड मिलता है।(फाइल फोटो)

இந்தப் பாலிசி எடுத்த 6 மாதங்கள் கழித்து, தேவைப்பட்டால் பாலிசியை சரண்டர் செய்யலாம். இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெறும் வாய்ப்பும் உள்ளது. ஆனால், கடன் தொகை பாலிசியில் செய்யும் முதலீட்டைப் பொறுத்தது. எல்ஐசியின் இந்தத் திட்டத்தில் சேரவும் மேலும் தகவல் அறியவும் www.licindia.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தைப் பார்க்கலாம்.

click me!