ரூ.10,000 முதலீட்டில் தொடங்கப்பட்ட IT சாம்ராஜ்யம்! சாமானியன் சாதித்த கதை தெரியுமா?!

Published : Jul 11, 2025, 01:15 PM IST

இன்ஃபோசிஸ் நிறுவனம் எளிமையான தொடக்கத்திலிருந்து உலகளாவிய வெற்றியை எட்டியது. நாராயண மூர்த்தி மற்றும் அவரது நண்பர்கள் சிலரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், இன்று லட்சக்கணக்கான ஊழியர்களுடன் உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.

PREV
16
"ஒரு சமானியன் சாதிக்க முடியும்"

இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப உலகில் இன்று உலகையே கணிக்க வைத்திருக்கும் ஒரு பெரும் பெயர் Infosys. ஆனால் இந்நிறுவனத்தின் பிறப்பு மிக எளிமையான பின்னணி கொண்டது என்றால் அதனை நம்மமுடியாது. இன்றைய இன்போசிஸ் ஏராளமான ஊழியர்களை நியமித்து, நவீன தொழில்நுட்பம் கொண்டு உலக சந்தையை கைப்பற்றி இருக்கிறது என்றாலும், அது ஒரு காலத்தில் சில நண்பர்கள் இணைந்து துவங்கிய சிறிய முயற்சி மட்டுமே. ஒரு சமானியன் சாதிக்க முடியும் என்பதற்கு இது ஒரு சாட்சி.

26
ரூ.10,000 முதலீடு

1981-ம் ஆண்டு, நாராயண மூர்த்தி எனும் எளிமையான நபரின் தலைமையில் ஏழு நண்பர்கள் (Nandan Nilekani, S. Gopalakrishnan, S.D. Shibulal, K. Dinesh, Ashok Arora, N.S. Raghavan) சேர்ந்து, Infosys Consultants Private Limited என்ற பெயரில் நிறுவனம் ஆரம்பித்தனர். அவர்கள் ஒருவருக்கு ஒருவரே நம்பிக்கையோடு துணைநின்றனர். அந்த நேரத்தில் மூர்த்தி அவர்களது மனைவி சுதா மூர்த்தி, தனது சேமிப்பிலிருந்து ரூ.10,000 முதலீடு செய்து ஒரு பெரிய சாம்ராஜ்யத்திற்கு அடித்தளமிட்டார்.

36
போராடினால் வெற்றி நிச்சயம்

அந்த காலத்தில் கணினி வசதிகள் இந்தியாவில் பரவலாகக் கிடையாது. டெல்லியில் ஒரு சிறிய அலுவலகம், மிகவும் குறைந்த வசதிகள் மற்றும் வெறும் சில ரூபாய் தான் அவர்களிடம் இருந்தது. ஆனால் அவர்கள் மனதில் இருந்தது உறுதி, கனவு, விடாமுயற்சி. முதல் ஓரிரண்டு ஆண்டுகள் மிகவும் கடினமான காலங்கள். வாடிக்கையாளர்கள் கிடைப்பதும் கடினம், தொழில்நுட்ப வசதிகளும் இல்லை. ஆனால் அவர்கள் விடாமுயற்சி கைவிடவில்லை. தொடர்ந்து போராடி பல்வேறு பணிகளை பெற்று கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி சர்வதேச தகவல் தொழில் நுட்ப உலகிற்கே சவால் விட்டனர்.

46
சாதித்த நாராயண மூர்த்தி - சுதா தம்பதி

Infosys தனது ஆரம்ப காலங்களில் மென்பொருள் வளர்ச்சி (software development) மற்றும் சர்வீஸ் கவுன்சல்டிங் வேலைகளில் கவனம் செலுத்தியது. அவர்கள் மெதுவாக வெளிநாட்டு வாடிக்கையாளர்களுடன் ஒப்பந்தங்களை பெற்றுக் கொண்டார்கள். முன்னொரு காலத்தில் ஒரே ஒரு கணினி கொண்டு துவங்கிய நிறுவனம், அதன் தரமான சேவைகளால் நம்பிக்கையை சம்பாதித்தது.1993-ம் ஆண்டு, Infosys பங்குச் சந்தையில் (IPO) புகுந்தது. அந்த காலகட்டத்தில் இந்தியாவின் டெக் துறையில் இது மிகப்பெரிய நிகழ்வாக கருதப்பட்டது. அந்த பங்கு முதலீட்டாளர்களுக்கு பெரும் பலன் தந்தது. Infosys பங்கு மதிப்பு பெரிதும் உயர்ந்து, முதலீட்டாளர்கள் பணக்காரரானார்கள். இதில் Infosys-ஐ நம்பிய நிதியுதவியாளர்கள் முக்கிய பங்கு வகித்தனர்.

56
Infosys வளர்ச்சியின் முக்கிய காரணிகள்
  • தரமான மென்பொருள் சேவைகள் வழங்கிய திறமை
  • நேர்மை, நம்பிக்கைக்கு மிக முக்கியத்துவம் கொடுத்த நிர்வாகம்
  • ஊழியர்களின் திறமையை மதித்து வளர்ச்சியை உறுதி செய்த பண்பாடு
  • பன்னாட்டு சந்தையை கவனித்து வாடிக்கையாளர்களுக்கு நவீன சேவைகள் அளித்த திறன்

Infosys தனது வளர்ச்சியை மேலும் விரிவுபடுத்துவதற்காக அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவில் அலுவலகங்களை நிறுவியது. அத்துடன் உலகப் பங்கு சந்தைகளிலும் பட்டியலிட்டு, தனது அடிப்படை முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தியது. Infosys Technologies Limited என்ற பெயராக 1992-இல் மாறியது.Infosys நிறுவனத்தின் வளர்ச்சியில் நாராயண மூர்த்தியின் நிதானமான தலைமையும், Nandan Nilekani உள்ளிட்ட கூட்டாளர்களின் முயற்சியும் முக்கிய பங்கு வகித்தது. வேலைவாய்ப்பு மற்றும் இந்தியாவின் தொழில்நுட்பப் புகழை உலக அரங்கில் எடுத்துச் சென்றனர். Infosys நிறுவனமே இந்தியாவின் "IT boom"-க்கு அடித்தளம் போட்ட முக்கிய சக்தியாக கருதப்படுகிறது.Infosys வளர்ச்சி ஊக்கமளிக்கும் கதையாக மாறியது. பல இளைஞர்களுக்கு இது ஒரு "Role Model" நிறுவனம். Infosys நிறுவனம் நிறுவன பண்பாட்டில் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது. ஊழியர்களின் நலனுக்கும் வளர்ச்சிக்கும் முன்னுரிமை வழங்கியது. ஆண்டுதோறும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கி, இந்தியா முழுவதும் பெரும் தாக்கம் ஏற்படுத்தியது.

66
Infosys இப்போது
  • 3 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள்
  • 60க்கும் மேற்பட்ட நாடுகளில் சேவைகள்
  • ஆண்டுக்கு லட்சக் கோடி ரூபாய் வருமானம்
  • நவீன ஆராய்ச்சி, சுத்தமான நிர்வாகம், பண்பாட்டுக்கேற்ப சேவைகள்

Infosys நிறுவனம் வெறும் வணிக நிறுவனமாக அல்ல. இது இந்தியாவின் திறமை, நம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் உயர்ந்த இலக்கை அடைவதற்கான உதாரணமாகத் திகழ்கிறது. ஏழுபேப் தொடங்கிய இந்த சிறிய கனவு இன்று சர்வதேச அளவில் பெரும் வெற்றி் பிம்பமாக மாறியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories