ஆன்லைனில் முன்பதிவு செய்வது எப்படி?
ஸ்டேஷனுக்குச் சென்ற பிறகு அறைகள் கிடைக்காமல் போவதைத் தவிர்க்க, நீங்கள் முன்கூட்டியே ஆன்லைனில் பதிவு செய்யலாம். IRCTC Tourism அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும். மெனுவில் உள்ள 'Retiring Room' என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் டிக்கெட்டில் உள்ள PNR எண்ணை உள்ளிடவும். நீங்கள் விரும்பும் அறையின் வகை மற்றும் தங்கும் நேரத்தைத் தேர்வு செய்யவும். ஆன்லைன் மூலம் கட்டணத்தைச் செலுத்தி முன்பதிவை உறுதி செய்யவும்.
நீங்கள் நீண்ட காலம் தங்க விரும்பினால், ரூ.40 என்ற பெயரளவு கட்டணத்தில் தங்குவதை 48 மணிநேரம் வரை நீட்டிக்கலாம்.