Investment: இனிமேல் வெள்ளிதான் லாபத்தை அள்ளிக்கொடுக்கும்.! இப்படி முதலீடு செய்தால் சொல்லி அடிக்கும் கில்லி நீங்கதான்.!

Published : Sep 03, 2025, 03:52 PM IST

தங்கத்தை விட குறைந்த விலையில் கிடைக்கும் வெள்ளி, சாதாரண முதலீட்டாளர்களுக்கு சிறந்த வாய்ப்பு. தொழில் துறையில் அதிகரித்து வரும் தேவையால், வெள்ளியின் விலை எதிர்காலத்தில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
15
குறைந்த செலவில் வெள்ளியில் லாபகரமாக முதலீடு செய்வது எப்படி?

தங்கத்துடன் ஒப்பிடும்போது வெள்ளியின் விலை மிகவும் குறைவானதால், சாதாரண முதலீட்டாளர்களும் இலகுவாக முதலீடு செய்ய முடியும். வெள்ளி என்பது ஆபரணங்களில் மட்டுமல்லாது, தொழில்துறையிலும் பெரிதும் பயன்படுகிறது. சோலார் பேனல்கள், மின்சார வாகனங்கள், மின் சாதனங்கள், மருத்துவ உபகரணங்கள் போன்ற பல துறைகளில் வெள்ளி பயன்படுவதால் அதன் தேவை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்த தேவை எதிர்காலத்தில் விலையை உயர்த்தும் என்பதால், முதலீட்டாளர்களுக்கு வெள்ளி ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது.

25
வெள்ளியில் முதலீடு செய்யும் வழிகள்

கட்டி வெள்ளி (Physical Silver): வெள்ளி நாணயம், கட்டி அல்லது ஆபரணமாக வாங்குவது பாரம்பரியமான முதலீடு. ஆனால் இதை பாதுகாப்பாக வைத்திருப்பது சிரமமான ஒன்று. மேலும் செய்கூலி, வரி, ஜி.எஸ்.டி போன்ற கூடுதல் செலவுகள் 5–25% வரை போகலாம். ஆகவே நீண்டகால முதலீட்டுக்கு இது சற்றே சிரமமானது.

சில்வர் ஃபியூச்சர் (Silver Future): இதில் அதிக லாபம் பெறலாம், ஆனால் ரிஸ்க் கூட அதிகம். லீவரேஜ் வசதி இருப்பதால், அனுபவமுள்ள முதலீட்டாளர்களுக்கே இது பொருத்தமாகும்.

இ–சில்வர் (E-Silver): டிஜிட்டல் முறையில் வெள்ளியை வாங்கும் வசதி. டீமேட் கணக்கில் குறைந்த அளவிலும் வாங்கி வைக்கலாம். தேவையின்போது விற்று பணமாக மாற்றவும் எளிது. ஆனால் பரிமாற்றக் கட்டணங்கள் சற்று அதிகம் இருக்கும்.

35
சிறந்த முதலீட்டு ஆப்ஷன்கள்

சில்வர் ETF: பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யப்படும் வெள்ளி அடிப்படையிலான நிதி கருவி. குறைந்த செலவில் வாங்கி விற்று லாபம் ஈட்டலாம். தரம் மற்றும் சேமிப்பு சிக்கல்கள் இல்லாததால் பெரும்பாலான முதலீட்டாளர்களுக்கு இது ஏற்றது. செலவு விகிதம் சுமார் 0.5%.

சில்வர் சேவிங்ஸ் மியூச்சுவல் ஃபண்ட்: 500 ரூபாயிலிருந்தே முதலீடு செய்யலாம். மாதாந்திர SIP மூலமாகவோ அல்லது Lumpsum முறையிலோ முதலீடு செய்யலாம். இதன் செலவுகளும் ETF போலவே குறைவு.

45
வெள்ளியின் வருமானம்

2025 ஆகஸ்ட் மாத நிலவரப்படி, கடந்த மூன்று மாதங்களில் வெள்ளி 20% வருமானம் கொடுத்துள்ளது. கடந்த ஓராண்டில் 36% மற்றும் மூன்றாண்டு அடிப்படையில் வருடத்திற்கு சராசரியாக 28% வளர்ச்சி கண்டுள்ளது.

55
முதலீட்டு யுக்தி இப்படிதான் இருக்கும்

வெள்ளி முதலீடு என்பது நீண்டகால சேமிப்பை விட சந்தை நிலையைப் பொறுத்த குறுகிய மற்றும் நடுத்தரகால முதலீடாகவே பார்க்கப்படுகிறது. பொருளாதார மந்த நிலை வரும்போது பங்குகளை விட தங்கம் மற்றும் வெள்ளி அதிக பாதுகாப்பான முதலீடாக மாறும். எனினும் மொத்த முதலீட்டில் 10% அளவுக்கு மட்டுமே வெள்ளியில் முதலீடு செய்வது பாதுகாப்பானது. குறைந்த செலவில் தொடங்க விரும்புவோர் சில்வர் ETF மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் போன்ற டிஜிட்டல் வழிகளைத் தேர்வு செய்தால், எளிதில் லாபகரமாக முதலீடு செய்ய முடியும்.

Read more Photos on
click me!

Recommended Stories