Indian Railways Daily Revenue : இந்திய ரயில்வே தினமும் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்களை இயக்குகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் வந்தாலும், பயணிகளை விட சரக்கு ரயில்கள் மூலமாகவே அதிக லாபம் கிடைக்கிறது.
இந்திய ரயில்வேயை நம்ம நாட்டின் உயிர்நாடினு சொல்லலாம். இவ்வளவு பெரிய நெட்வொர்க்கை நடத்த தினமும் கோடிக்கணக்கில் வருமானம் வருது. அதே அளவுக்குச் செலவும் இருக்கு. ஒரு நாளைக்கு எத்தனை ரயில்கள் ஓடுது? ரயில்வேக்கு எவ்வளவு வருமானம் வருது? முழு விவரத்தையும் இங்க பார்க்கலாம்.
இந்திய ரயில்வேயில் தினமும் சுமார் 24 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரயில்கள் ஓடுது. இதுல 13,500 முதல் 14,000 ரயில்கள் பயணிகள் ரயில்கள். சாதாரண ரயில்கள், எக்ஸ்பிரஸ், மெயில், புறநகர் ரயில்கள், வந்தே பாரத், அம்ரித் பாரத்னு எல்லாமே இதுல அடங்கும். இந்த ரயில்கள் மூலமா தினமும் 2 முதல் 2.5 கோடி மக்கள் பயணம் செய்றாங்க. இதுபோக, தினமும் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சரக்கு ரயில்களும் ஓடுது. நிலக்கரி, சிமெண்ட், இரும்பு, உரம், தானியங்கள்னு நாட்டின் மூலை முடுக்குகளுக்கு இந்த ரயில்கள் பொருட்களைக் கொண்டு போகுது.
25
ரயில்வேக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு வருமானம்?
இந்திய ரயில்வேயின் ஆண்டு வருமானம் சுமார் 2.74 லட்சம் கோடி ரூபாய். அதாவது, ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான கோடிகள் வருமானம் கிடைக்குது. ஆனா, ரயில்வேக்கு அதிக பணம் வர்றது பயணிகள் டிக்கெட்ல இருந்து கிடையாது; சரக்கு ரயில்கள் மூலமாதான். மொத்த வருமானத்துல 60 முதல் 62 சதவீத பங்கு சரக்கு போக்குவரத்துல இருந்துதான் வருது. ஒரு நாளைக்கு சுமார் 465 கோடி ரூபாய் சரக்கு ரயில்கள் மூலமாவே கிடைக்குது. இதுல நிலக்கரி கொண்டு போறதுலதான் அதிக லாபம். பயணிகள் ரயில்கள் மூலமா தினமும் 200 முதல் 232 கோடி ரூபாய் (31%) வருமானம் வருது. மீதமுள்ள பணம் பார்சல், விளம்பரம், பழைய இரும்பு விற்பனை, குத்தகை மூலமா கிடைக்குது.
35
வர்ற பணம் எல்லாம் செலவுக்கே சரியா போகுது!
இவ்வளவு பெரிய ரயில்வே நெட்வொர்க்கை நடத்த செலவும் ரொம்ப அதிகமா இருக்கும். ரயில்வேயின் தினசரி பராமரிப்புச் செலவே சுமார் 690 முதல் 720 கோடி ரூபாய் வரை ஆகுது. ரயில்வேயில் வேலை செய்ற 12 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களின் சம்பளம், ஓய்வுபெற்ற ஊழியர்களின் பென்ஷனுக்கே பெரிய தொகை செலவாகுது. இதுபோக, ரயில் ஓடத் தேவையான மின்சாரம், டீசல், டிராக் பராமரிப்பு, ரிப்பேர், ரயில் நிலையங்கள் பராமரிப்பு, சிக்னல் சிஸ்டம்னு கோடிக்கணக்கில் செலவு பண்ண வேண்டியிருக்கு. பிராட்கேஜ் நெட்வொர்க்ல பெரும்பாலும் மின்மயமாக்கல் முடிஞ்சதால, மின்சாரப் பயன்பாடு இப்போ ரொம்ப முக்கியமா இருக்கு. செலவைக் குறைக்க ரயில்வே துறை இப்போ சூரிய சக்தி போன்ற மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்த ஆரம்பிச்சிருக்காங்க.
இந்திய ரயில்வேயின் பொருளாதார நிலையைப் புரிஞ்சுக்க 'ஆபரேட்டிங் ரேஷியோ' ரொம்ப முக்கியம். உதாரணத்துக்கு, ஆபரேட்டிங் ரேஷியோ 98.43 சதவீதம் இருக்குனா, ரயில்வே 100 ரூபாய் சம்பாதிக்க 98.43 ரூபாய் செலவு பண்ணுதுனு அர்த்தம். அதாவது, வருமானம் எவ்வளவோ, செலவும் கிட்டத்தட்ட அதே அளவுதான் இருக்கு. அதனால, ரயில்வேயை அதிக வருமானம் தரும் நிறுவனம்னு சொல்லலாமே தவிர, அதிக லாபம் சம்பாதிக்கும் பிசினஸ்னு சொல்ல முடியாது. வர்ற பணத்துல பெரும்பகுதி பராமரிப்புக்கே போயிடுது.
55
பயணிகள் டிக்கெட் விலை ஏன் குறைவா இருக்கு?
இந்திய ரயில்வே வெறும் ஒரு வியாபார நிறுவனமா மட்டும் செயல்படல. நாட்டின் சாதாரண மற்றும் நடுத்தர மக்களுக்குக் குறைந்த கட்டணத்துல பயண வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதும் அதோட பொறுப்புதான். கணக்குப்படி பார்த்தா, ஒரு பயணியை ஒரு கிலோமீட்டர் கூட்டிட்டுப் போக ரயில்வேக்கு சராசரியா 1.38 ரூபாய் செலவாகுது. ஆனா, பயணியிடம் இருந்து ரயில்வேக்குக் கிடைக்கிறது வெறும் 73 பைசாதான். அதாவது, டிக்கெட் மூலமா வர்ற வருமானத்தை விட, பயணிகளுக்குச் சேவை செய்ய ரயில்வே பண்ற செலவுதான் அதிகமா இருக்கு.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.