ரயிலில் குழந்தைகளுக்கு 50% கட்டணம்.. எந்த வயது வரை தெரியுமா? மறக்காக நோட் பண்ணிக்கோங்க!

Published : Oct 09, 2026, 09:53 AM IST

Indian Railway: ரயிலில் குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட வயது வரை பாதிக்கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறது. இந்தியன் ரயில்வேயின் இந்த விதிகள் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

PREV
14
ரயிலில் குழந்தைகளுக்கு 50% கட்டணம்

இந்தியாவில் குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான மற்றும் தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ள பலரும் விரும்புவது ரயில்களில்தான். உலகளவில் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாக‌ இந்தியன் ரயில்வே விளங்கி வருகிறது. தினசரி ஆயிரக்கணக்கான ரயில்கள் இயக்கப்படும் நிலையில், லட்சக்கணக்கான பயணிகள் பாதுகாப்பாக பயணம் செய்து வருகின்றனர். குடும்பத்துடன் ரயிலில் பயணம் செய்யும் போது, குறிப்பாக குழந்தைகளுடன் பயணம் செய்யும்போது, ரயில்வே துறையின் கட்டண முறைகள் மற்றும் சலுகைகள் குறித்துத் தெரிந்து கொள்வது அவசியமான ஒன்றாகும்.

24
5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் கிடையாது

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் ரயிலில் பயணம் செய்யும் பெற்றோர்களுக்கு இந்தியன் ரயில்வே கட்டண விலக்கு அளிக்கிறது

இலவச பயணம்: குழந்தைக்கு தனி இருக்கை அல்லது பெர்த் (Berth) தேவையில்லை என்றால், எந்தவித கட்டணமும் இன்றி குழந்தையை அழைத்துச் செல்லலாம். ஐஆர்சிடிசி (IRCTC) இணையத்தில் முன்பதிவு செய்யும் போது 'Add Infant without Berth' என்ற விருப்பத்தைப் பயன்படுத்தி குழந்தைகளின் விவரங்களைச் சேர்க்க வேண்டும்.

தனி பெர்த் தேவைப்பட்டால் என்ன செய்வது? ஒருவேளை உங்கள் மழலைக்குத் தனி பெர்த் வேண்டும் என்று விரும்பினால், பெரியவர்களுக்கான முழுக் கட்டணத்தைச் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

34
5 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான புதிய விதிகள்

ஐந்து வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்குப் ரயில் பயணத்தின் போது இரண்டு வகையான தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

பெர்த் இல்லாவிட்டால் பாதிக் கட்டணம்: அதாவது குழந்தைக்கு தனி இருக்கை அல்லது பெர்த் தேவையில்லை எனில், பெரியவர்களுக்கான கட்டணத்தில் சுமார் பாதியளவே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இத்தகைய சூழலில் குழந்தைகள் பெற்றோருடன் இருக்கையைப் பகிர்ந்துகொண்டு பயணிக்க வேண்டும்.

பெர்த் ஒதுக்கீடு விரும்பினால் முழுக் கட்டணம்: தொலைதூரப் பயணங்களின் போது குழந்தைகள் வசதியாகத் தூங்குவதற்குத் தனி பெர்த் அவசியமென்றால், அதற்குப் பெரியவர்களுக்கான முழுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

44
12 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெரியவர்களாகக் கருதப்படுவர்

ரயில்வே விதிகளின்படி, பயணம் செய்யும் நாளில் 12 வயது அல்லது அதற்கு மேல் பூர்த்தியடைந்தவர்கள் அனைவரும் பெரியவர்களாகவே கருதப்படுகிறார்கள்.

இவர்களுக்கு முன்பதிவு மற்றும் முன்பதிவில்லாத பெட்டிகள் என அனைத்துப் பிரிவுகளிலும் முழுக் கட்டணமே வசூலிக்கப்படும். ஏசி கோச்சுகள் (AC Coaches), அதிவிரைவு ரயில்கள் (Superfast Express) மற்றும் சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில்கள் என அனைத்து வகை ரயில்களுக்கும் இந்த வயது மற்றும் கட்டண வரம்பு பொதுவானது.

இதை கவனத்தில் கொள்ளுங்க‌

வயது சான்றிதழ்: டிடிஆர் (TTE) சோதனை செய்யும் போது சிக்கல்களைத் தவிர்க்க, குழந்தைகளுக்கான வயது சான்றிதழ் (ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ் அல்லது பள்ளி அடையாள அட்டை) போன்றவற்றை உடன் வைத்திருப்பது மிகவும் நல்லது.

பயண நேர வயது: நீங்கள் டிக்கெட் புக் செய்யும் தேதியைக் கணக்கிடாமல், பயணம் மேற்கொள்ளும் நாளன்று குழந்தையின் வயது என்னவோ அதற்கேற்பவே விதிகள் பொருந்தும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories