பணப் பரிவர்த்தனை லிமிட் இதுதான்! மீறினால் வருமான வரி நோட்டீசுக்கு பதில் சொல்லணும்!

First Published | Nov 20, 2024, 3:58 PM IST

அதிக மதிப்புள்ள ரொக்கப் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது வருமான வரி நோட்டீஸ் அனுப்பக்கூடும். இதில் வருமான வரித்துறை விழிப்புடன் இருக்கும்.

Income Tax Rules on high value cash transactions

டிஜிட்டல் இந்தியா காலத்தில் கூட ரொக்கப் பண பரிவர்த்தனை செய்ய விரும்பும் பலரைக் காணலாம். சிறிய பரிவர்த்தனைகளுக்கு ரொக்கப் பணத்தை பயன்படுத்துவது நல்லது. ஆனால் பெரிய பண பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும்போது சிக்கல் எழுகிறது. இதில் வருமான வரித்துறை விழிப்புடன் இருக்கும். 5 விதமான அதிக மதிப்புள்ள பணப் பரிவர்த்தனைகளைச் செய்யும்போது வருமான வரி நோட்டீஸ் அனுப்பக்கூடும்.

Depositing cash in the bank account

மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (சிபிடிடி) விதிகளின்படி, ஒருவர் ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேல் ரொக்கமாக டெபாசிட் செய்தால், அது குறித்த தகவல் வருமான வரித்துறைக்கு அளிக்கப்படும். இந்தப் பணம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கலாம். நீங்கள் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமான பணத்தை டெபாசிட் செய்வதால், இந்த பணத்தின் ஆதாரம் குறித்து வருமான வரித்துறை கேள்வி எழுப்பும்.

Latest Videos


Depositing cash in fixed deposit

ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சத்திற்கு மேல் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யும்போது கேள்விகள் எழுவது போல், ஒரு நிதியாண்டில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிக்சட் டெபாசிட்களில் ரூ.10 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால், வருமான வரித்துறை பணத்தின் ஆதாரம் குறித்து விசாரிக்கலாம்.

Big property transactions

சொத்து வாங்கும்போது ரூ.30 லட்சம் அல்லது அதற்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனை செய்திருந்தால், சொத்து பதிவாளர் கண்டிப்பாக இது குறித்து வருமான வரித்துறைக்குத் தெரிவிப்பார். இத்தகைய சூழ்நிலையில், உங்களுக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் கிடைத்தது என்று வருமான வரித்துறை விசாரிக்கும்.

Payment of credit card bill

உங்கள் கிரெடிட் கார்டு பில் ரூ. 1 லட்சம் அல்லது அதற்கும் அதிகமாக இருந்தால், அதை நீங்கள் ரொக்கப் பணமாகச் செலுத்தினால், அந்தப் பணத்தின் ஆதாரம் என்ன என்று கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பலாம். எந்தவொரு நிதியாண்டிலும் நீங்கள் ரூ. 10 லட்சம் அல்லது அதற்கு மேல் கிரெடிட் கார்டு பில் செலுத்தினாலும் வருமான வரித்துறை நோட்டீஸ் வரக்கூடும்.

Buying shares, mutual funds, debentures or bonds

மியூச்சுவல் ஃபண்டு, கடன் பத்திரங்கள் போன்றவற்றை வாங்க அதிக அளவு பணம் பயன்படுத்தப்பட்டால், வருமான வரித்துறை கவனித்து நடவடிக்கை எடுக்கும். ஒருவர் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேல் பரிவர்த்தனை செய்தால், அது குறித்த தகவல் வருமான வரித்துறைக்கு அனுப்பப்படும். வருமான வரித்துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரிக்கும்.

click me!