3. பங்குச் சந்தையில் கடும் கண்காணிப்பு
பங்கு சந்தையில் கடும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். பங்குச் சந்தை அமைப்புகள் (Stock Exchanges) அனைத்துப் பரிவர்த்தனைகளின் பதிவுகளையும் 7 ஆண்டுகள் வரை வைத்திருக்க வேண்டும். இது வரி ஏய்ப்பைத் தடுக்க உதவும்.
4. வெளிநாட்டுப் பரிவர்த்தனைகளுக்கு புதிய ஃபார்முலா
இந்தியாவில் உள்ள சொத்துக்களுடன் தொடர்புடைய பங்குகளை வெளிநாட்டில் வைத்து கைமாற்றினால், அதில் இருந்து இந்தியாவுக்குக் கிடைக்க வேண்டிய வரியைக் கணக்கிட ஒரு புதிய ஃபார்முலா கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்குகளைக் குறைக்க உதவும்.
5. பங்குகளின் மதிப்பைக் கணக்கிடுதல்
பங்குகளின் சந்தை மதிப்பைக் கணக்கிடுவதற்குத் தெளிவான விதிகள் வருகின்றன. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகளுக்கு சந்தை விலையும், மற்ற நிறுவனங்களுக்கு மெர்ச்சன்ட் பேங்கர்களின் மதிப்பீடும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
6. சம்பளம் வாங்குவோர் கவனிக்க வேண்டியவை
ஊழியர்களுக்கு நிறுவனம் வழங்கும் சலுகைகளுக்கான வரியைக் கணக்கிடும் முறையில் மாற்றம் வருகிறது:
தங்குமிடம்: நிறுவனம் வழங்கும் வீட்டின் மதிப்பைக் கணக்கிடும்போது, அந்த நகரத்தின் மக்கள் தொகையும் கருத்தில் கொள்ளப்படும்.
உணவு: ஒரு வேளைக்கு 200 ரூபாய் வரையிலான உணவுக்கு மட்டுமே வரி விலக்கு கிடைக்கும்.
பரிசு: ஒரு வருடத்தில் 15,000 ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பரிசுகள் கிடைத்தால், அதற்கு வரி செலுத்த வேண்டும்.