நகை பிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்: அதிரடியாக குறைந்த தங்கம் விலை - சவரன் எவ்வளவு தெரியுமா?

First Published | Dec 28, 2024, 10:29 AM IST

கடந்த சில தினங்களாக போக்கு காட்டி வந்த தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Gold Rate

நாட்டின் பொருளாதாரத்தில் தங்கம் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில் தங்கத்தின் மீதான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுவாக இந்தியாவில் திருமணத்தின் போது மனப்பெண்ணுக்கு தங்க நகையை அணிவிப்பது எழுதப்படாத சம்பிரதாயமாக உள்ளது. மேலும் பெண்களுக்கும் நாளுக்கு நாள் நகையின் மீதான மோகம் அதிகரித்தபடியே உள்ளது.

Gold Rate

முதலீடு

நகை ஆடம்பரப் பொருளாக இருந்தாலும் அதன் மதிப்பு ஒவ்வொரு நாளும் உயர்ந்து வருவதால் அதன் மீதான முதலீடும் அதிகரிக்கிறது. நாம் சேமிக்கும் பணத்தை பணமாக சேமிக்காமல் நகையாகவோ, நிலமாகவோ சேமித்தால் அதன் மதிப்பு வேகமாக உயரும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் நிலத்தில் முதலீடு செய்வதில் ஆபத்து இருப்பதால் நகையில் முதலீடு செய்யவே அதிகமானோர் ஆர்வம் காட்டுகின்றனர்.

Tap to resize

Gold Rate

அவசர தேவைக்கு

மேலும் நிலம், வீடு உள்ளிட்ட சொத்துகள் அவசரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் நகையை அவசரத்திற்கு எளிதில் அடகு வைக்க முடிகிறது. இவை அனைத்தும் நகையை வாங்குவதற்கான காரணங்களை அதிகரிக்கிறது. 

Gold Rate

இதனிடையே கடந்த சில தினங்களாக ஏற்றம் கண்டு வந்த தங்கத்தின் விலை, இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.15ம் ஒரு சவரன் தங்கம் ரூ.120ம் குறைந்துள்ளது. அந்தவகையில் ஒரு கிராம் தங்கம் ரூ.7,135க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.57,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Latest Videos

click me!