போஸ்ட் ஆபீஸில் ரூ.3,00,000 முதலீடு - ரூ.44,664 உறுதியான வருமானம்!

Published : May 23, 2025, 10:04 AM IST

இந்திய தபால் நிலையத்தின் டைம் டெபாசிட் திட்டத்தில் ₹3,00,000 முதலீடு செய்தால் ₹44,664 வரை உறுதியான வட்டி கிடைக்கும். 2 ஆண்டு TD திட்டத்தில் 7% வட்டி வீதம் வழங்கப்படுகிறது. மத்திய அரசின் பாதுகாப்புடன் கூடிய இந்த திட்டம் பாதுகாப்பான வருமானம் தரும் 

PREV
18
₹3,00,000 முதலீடு - உறுதியான வருமானம்

வங்கி வட்டி வீதங்கள் தொடர்ந்து குறைந்து வரும் இந்நேரத்தில், பொதுமக்கள் பாதுகாப்பான மற்றும் உறுதியான வருமானம் தரும் முதலீட்டு வாய்ப்புகளைத் தேடி வருகின்றனர். இதை பயன்படுத்திக் கொண்டு, இந்திய தபால் நிலையம் தனது டைம் டெபாசிட் (TD) சேமிப்பு திட்டங்கள் மூலம் சிறந்த வாய்ப்புகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, ₹3,00,000 முதலீடு செய்தால் ₹44,664 வரை உறுதியான வட்டி கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

28
எப்படி ₹44,664 வரை வட்டி கிடைக்கும்?

இந்திய தபால் நிலையத்தின் 2 ஆண்டு டைம் டெபாசிட் திட்டத்தில் 7% வட்டி வீதம் வழங்கப்படுகிறது. இதில் ₹3,00,000 முதலீடு செய்தால், 2 ஆண்டுகள் முடிவில் மொத்தமாக ₹3,44,664 கிடைக்கும். இதில் ₹44,664 என்பது வாடிக்கையாளருக்கு கிடைக்கும் உறுதியான வட்டி வருமானம் ஆகும்.

38
தற்போதைய வட்டி வீகித விவரங்கள் (ஏப்ரல் – ஜூன் 2025)

1 ஆண்டு 6.9%

2 ஆண்டு 7.0%

3 ஆண்டு 7.1%

5 ஆண்டு 7.5%

5 ஆண்டு TD திட்டத்தில் முதலீடு செய்தால், வருமான வரி சட்டத்தின் 80C

பிரிவின் கீழ் வரிவிலக்கு பெறும் தகுதியும் உண்டு.

48
தபால் நிலைய முதலீட்டு திட்டத்தின் பாதுகாப்பும் நம்பிக்கையும்

இந்திய தபால் நிலையத்தின் அனைத்து சேமிப்பு திட்டங்களும் மத்திய அரசின் பாதுகாப்புடன் வழங்கப்படுவதால், முதலீட்டாளர்கள் எந்தவிதமான சந்தை ஆபத்துகளுக்கும் உட்பட வேண்டியதில்லை

58
TD திட்டங்கள் பாதுகாப்பானவை

FD திட்டங்களை விட இந்த TD திட்டங்கள் பாதுகாப்பானவை, ஏனெனில் வங்கிகள் பொதுவாக மூத்த குடிமக்களுக்கு கூடுதல் வட்டியைக் கொடுப்பதோடு, பொதுமக்களுக்கு குறைந்த வட்டிதான் வழங்குகின்றன. ஆனால் தபால் நிலையம் அனைவருக்கும் சம வட்டியை வழங்குகிறது.

68
திட்டத்தில் சேர தேவையான ஆவணங்கள்

ஆதார் அட்டை

பான் கார்டு

புகைப்படம்

முகவரி சான்று

தபால் கணக்கு விவரம்

78
எப்படி முதலீடு செய்யலாம்?

அருகிலுள்ள தபால் நிலைய கிளையில் நேரில் செல்லலாம்

இந்திய தபால் இணையதளம் www.indiapost.gov.in மூலம்

India Post Payments Bank (IPPB) மொபைல் செயலியில் ஆன்லைனில் பதிவு செய்து முதலீடு செய்யலாம்

IPPB செயலி மூலம் வீட்டிலிருந்தே சேமிப்பு திட்டத்தில் இணைவது மிகவும் எளிது.

88
டைம் டெபாசிட் திட்டம் பாதுகாப்பானது

தற்போதைய பொருளாதார சூழ்நிலையில், பொதுமக்களுக்கு உயர் பாதுகாப்பு மற்றும் உறுதியான வருமானம் தரும் திட்டங்களை தேர்வு செய்வது மிகவும் அவசியமாக இருக்கிறது. அந்த அடிப்படையில், இந்திய தபால் நிலையத்தின் டைம் டெபாசிட் திட்டம் சிறந்த தேர்வாக இருக்கிறது.

Read more Photos on
click me!

Recommended Stories