கிரெடிட் ஸ்கோர் என்பது இந்தியாவின் நிதித் துறையில், பல்வேறு வகைகளில் கடன் வழங்கும்போது கவனிக்கப்படும் குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும். கடன் வாங்க விரும்பினாலும் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினாலும், உங்கள் கிரெடிட் ஸ்கோர் சிறப்பாக இருப்பது அவசியம். இந்த க்ரெடிட் ஸ்கோர் பொதுவாக 300 முதல் 900 வரை இருக்கும்.
கிரெடிட் ஸ்கோர் என்பது உங்கள் கடன் வரலாற்றின் அடிப்படையில் உங்களுக்கான கடன் தகுதியைப் பிரதிபலிக்கும் மூன்று இலக்க எண்ணாகும். இந்த ஸ்கோர் அதிகமாக இருந்தால் நல்லது. கடன் வாங்கியதைத் திருப்பிச் செலுத்திய வரலாறு, கடன் பயன்பாடு, கடன் வரலாற்றின் காலம் , கடன் வகைகள் மற்றும் சமீபத்திய கடன் கோரிக்கைகள் போன்ற காரணிகளால் கிரெடிட் ஸ்கோர் தீர்மானிக்கப்படும்.