Cibil score update
சாதகமான கடன் விதிமுறைகளைப் பெறுவதற்கு ஒரு நல்ல கிரெடிட் ஸ்கோரை பராமரிப்பது அவசியம். CIBIL போன்ற கிரெடிட் பீரோவிடமிருந்து உங்கள் கிரெடிட் ஸ்கோரைச் சரிபார்க்க, உங்கள் வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ள பான் எண் தேவைப்படும்.
Cibil score check
கிரெடிட் பீரோவான சிபில் வங்கி மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு கடன் மதிப்பீடுகளை வழங்குகிறது. 300 முதல் 900 வரையிலான மூன்று இலக்க எண்ணைப் பயன்படுத்தி கிரெடிட் ஸ்கோர் குறிக்கப்படுகிறது. இந்த மதிப்பெண் அடிப்படையில் கடன் தொகை மற்றும் விதிமுறைகள் தீர்மானிக்கப்படும்.
Cibil Score without Pan card
ஆனால், பான் கார்டு இல்லாமல் ஆன்லைனில் உங்கள் கிரெடிட் ஸ்கோரை அணுகுவதில் சிரமம் இருந்தால், அதற்கு மாற்று வழி உள்ளது. பான் கார்டு இல்லாமலே ஆன்லைனில் இலவசமாக CIBIL ஸ்கோரைச் சரிபார்க்கலாம்.
How to check Cibil Score
அதிகாரப்பூர்வ சிபில் இணையதளத்திற்குச் சென்று, 'பெர்சனல் சிபில் ஸ்கோர்' (Personal CIBIL Score) என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்யவும். தொடர்ந்து 'உங்கள் இலவச சிபில் ஸ்கோரைப் பெறுங்கள்' (Get your free CIBIL score) என்பதைக் கிளிக் செய்யவும்.
CIBIL scores
சிபில் இணையதளத்தில் கணக்கு வைத்திருக்கவில்லை என்றால், எளிதாக உங்கள் அக்கவுண்டை ஆரம்பிக்கலாம். அடையாளச் சான்றுக்கு, பான் கார்டுக்குப் பதிலாக பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற மாற்று அடையாள ஆவணங்களைத் தேர்ந்தெடுத்து கணக்கு தொடங்கலாம்.
CIBIL Score Tips
பிறந்த தேதி, மாநிலம், மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை நிரப்பி சமர்ப்பித்தவுடன், ஒரு OTP கிடைக்கும். அதை உரிய இடத்தில் டைப் செய்து Submit செய்தால் உங்கள் கணக்கு உருவாக்கப்பட்டுவிடும். பிறகு எந்த நேரத்திலும் சிபில் இணையதளத்திற்குச் சென்று உங்கள் சிபில் ஸ்கோரைப் பார்க்கலாம்.