இடம் ஏற்கனவே இருந்தாலும், வீடு கட்டுவதற்கான கட்டுமானச் செலவுதான் அடுத்த பெரிய செலவாக இருக்கும். இதில் வீடு கட்டும் முக்கியப் பொருட்களின் விலை மட்டுமின்றி, பல்வேறு பணிகளுக்கான தனித்தனி செலவுகளும் சேரும்.
கட்டுமானப் பொருட்கள் : செங்கல், சிமெண்ட், மணல், ஜல்லி, இரும்புக் கம்பி உள்ளிட்ட அடிப்படைப் பொருட்கள் தேவைப்படும். இவற்றின் விலை, வீட்டின் அளவு மற்றும் கட்டுமானத் தரத்தைப் பொறுத்து மாறுபடும்.
தொழிலாளர் செலவு: மேஸ்திரி, கொத்தனார், தச்சர், பெயிண்டர், எலக்ட்ரீஷியன், பிளம்பர் உள்ளிட்ட தொழிலாளர்கள் மட்டுமல்லாமல் பொறியாளர் அல்லது கட்டிடக் கலைஞர் கட்டணமும் கட்டுமான பட்ஜெட்டில் முக்கியப் பங்கு வகிக்கும். இதுமட்டுமில்லாமல் மின்சார வேலை, பிளம்பிங், கதவு, ஜன்னல், தரை, பெயிண்டிங், சமையலறை, கழிப்பறை போன்ற செலவுகளும் சேரும்.
அதனால், சதுர அடிக்கு இவ்வளவு என்ற கட்டுமான மதிப்பீட்டை மட்டும் பார்த்து பட்ஜெட் போடாமல், இந்த ஒவ்வொரு செலவையும் தனித்தனியாகக் கணக்கிட்டு, எதிர்பாராத செலவுகளுக்காக கூடுதல் தொகையையும் வைத்திருப்பது நல்லது.