Govt Scheme: ரூ.10 லட்சம் வரை கடன் + 50% மானியம்! ஏற்கனவே தொழில் செய்பவர்களுக்கு ஜாக்பாட்.!

Published : Oct 03, 2026, 11:37 AM IST

ஏற்கனவே விவசாய தொழில் செய்பவர்களுக்கு அதிகபட்சம் ரூ.10 லட்சம் திட்டத்திற்கு 50% மானியம் (ரூ.5 லட்சம் வரை). விரிவாக்கம், நவீனமயமாக்கல் மற்றும் மதிப்பு கூட்டலுக்கு அரசு உதவி. தகுதி, விண்ணப்ப முறை மற்றும் முழு விவரங்கள் இங்கே.

PREV
15
50 சதவீதம் மானியம்

தமிழகத்தில் ஏற்கனவே விவசாயம் சார்ந்த தொழில் செய்து வருபவர்களுக்கு அரசு ஒரு சிறப்பான வாய்ப்பை வழங்கியுள்ளது. Department of Agricultural Marketing and Agri Business நடத்தும் Agri Entrepreneurship Scheme-ன் கீழ், ஏற்கனவே உள்ள தொழில்முனைவோருக்கு அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை திட்ட செலவுக்கு 50 சதவீதம் மானியம் கிடைக்கிறது. இந்த மானியம் அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை இருக்கும். மீதமுள்ள தொகைக்கு வங்கி கடன் பெறலாம். தொழில்முனைவோர் தங்கள் பங்காக குறைந்தபட்சம் 25 சதவீதம் முதலீடு செய்ய வேண்டும்.

25
யாருக்கு கிடைக்கும் இந்த கடன் உதவி?

இந்த திட்டம் ஏற்கனவே இயங்கி வரும் agri தொழில்களை விரிவாக்கம் செய்யவும், புதிய மதிப்பு கூட்டல் நடவடிக்கைகளில் ஈடுபடவும், பதப்படுத்தும் அலகை நவீனப்படுத்தவும் உதவுகிறது. விவசாய பொருட்களை பதப்படுத்துதல், பேக்கேஜிங், value addition போன்ற செயல்பாடுகளுக்கு இந்த நிதி உதவி கிடைக்கும். சுற்றுச்சூழலுக்கு உகந்த, எரிசக்தி சேமிப்புள்ள மற்றும் ஏற்றுமதி வாய்ப்புள்ள திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

35
தொழில் அனுபவம் இருக்க வேண்டும்.!

தகுதி பெற குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் தொழில் அனுபவம் இருக்க வேண்டும். Degree, Diploma, ITI அல்லது Vocational training பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விவசாய பட்டதாரிகளுக்கு கூடுதல் முன்னுரிமை உண்டு. Sole proprietorship, Partnership அல்லது Private Limited நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். Farmer Producer Company-யின் இயக்குநர்கள் மற்றும் ஏற்கனவே பிற அரசு மானியத் திட்டங்களில் அதே உள்கட்டமைப்புக்கு உதவி பெற்றவர்கள் தகுதியற்றவர்கள்.

45
பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்

விண்ணப்ப செயல்முறை எளிமையானது. முதலில் மாவட்ட அளவில் நடைபெறும் facilitation workshop-ல் பங்கேற்க வேண்டும். பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு இரண்டு நாள் தொழில்முனைவு பயிற்சி அளிக்கப்படும். அதன் பிறகு business plan தயாரிப்பதற்கு அதிகாரிகள் உதவுவார்கள். Business plan வங்கிக்கு அனுப்பப்பட்டு கடன் அனுமதி கிடைத்தவுடன், மானியம் back-ended subsidy ஆக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

55
இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் மக்களே.!

இந்த திட்டம் ஏற்கனவே தொழில் செய்து வருபவர்களுக்கு பெரும் உதவியாக அமைகிறது. சிறிய முதலீட்டில் வணிகத்தை விரிவாக்கி அதிக வருமானம் ஈட்ட வாய்ப்பு கிடைக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக தங்கள் மாவட்ட Deputy Director of Agriculture (Agri Business) அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்று விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லுங்கள்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories