தங்கத்தின் விலை சரிந்ததா.? இன்று ஒரு கிராம் தங்கம் இவ்வளவு தானா.?

Published : Jan 06, 2025, 10:15 AM IST

தங்கத்தின் விலை ஏறி இறங்கி வருகிறது. சர்வதேச சூழல், ரூபாயின் மதிப்பு, அரசியல் பதற்றங்கள் போன்ற காரணங்களால் தங்கத்தின் விலையில் மாற்றம் நிகழ்கிறது. 2024ல் தங்கம் விலை உயர்ந்த நிலையில், 2025லும் ஏற்ற இறக்கம் தொடர்கிறது.

PREV
14
தங்கத்தின் விலை சரிந்ததா.? இன்று ஒரு கிராம் தங்கம் இவ்வளவு தானா.?
gold rate

ஏறி இறங்கும் தங்கம் விலை

தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் ஏறி இறங்கி வருகிறது.  தங்கத்தின் விலை அதிகரித்தாலும் நகைக்கடைகளில் கூட்டம் குறைந்ததில்லை. அந்த வகையில் தங்கத்தின் மீதான ஈர்ப்பு இந்திய மக்களிடம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாகவே தங்கத்தை அதிகளவு இந்திய மக்கள் வாங்குகிறார்கள். இந்தியாவில் பொறுத்தவரை திருமணம்,விஷேச நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக தங்கம் வாங்குவது அதிகரித்துள்ளது. மேலும் சிறந்த முதலீடாக தங்கத்தை பார்ப்பதாலும் தங்கத்தை நடுத்தர வர்க்க மக்களும் வாங்கி வருகிறார்கள். 

24
Today Gold Rate

தங்கம் விலை உயர்வு -காரணம் என்ன.?

சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் நிகழ்கிறது. மேலும் தங்கத்தின் விலையானது சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலையை பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த 2024ஆம் ஆண்டில் மட்டும் தங்கத்தின் விலையானது ஒரு சவரனுக்கு 22ஆயிரம் ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் உயரக்கூடும் என கருதப்படுகிறது. 
 

34
gold rate

அதிர்ச்சி கொடுத்த 2025

மேலும் சர்வதேச அரசியல் பதற்றங்கள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இதனால் தங்கத்தின் விலை சவரன் ஒரு லட்சம் ரூபாயை தொட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 2025ஆம் ஆண்டு தொடக்கமே நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த வகையில் 3 நாட்களில் 1200 ரூபாய் அளவிற்கு தங்கத்தின் விலை உயர்ந்தது. ஆனால் அடுத்த நாளே தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்தது.

44
gold rate today

இன்றைய தங்கம் விலை என்ன.?

இதனையடுத்து நேற்று தங்க வர்த்தக சந்தை விடுமுறை காரணமாக  ஒரு கிராம்  7215-க்கும், சவரனுக்கும், சவரன்  ரூ 57,720-க்கும் விற்பனையானது. இன்று தங்க வர்த்தக சந்தையின் தொடக்க நாளில் தங்கத்தின் விலையானது எந்தவித மாற்றுமும் இன்றி விற்பனைசெய்யப்படுகிறது. 

click me!

Recommended Stories