மீண்டும் நகைபிரியர்களுக்கு ஷாக்.! கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை.! ஒரு சவரன் விலை இவ்வளவா.?

Published : Dec 11, 2024, 09:37 AM ISTUpdated : Dec 11, 2024, 09:41 AM IST

இந்தியா மற்றும் சீனாவில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. திருமண சீசன், எதிர்கால சேமிப்பு மற்றும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணிகள் தங்கத்தின் விலையை உயர்த்துகின்றன. வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் உயரக்கூடும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

PREV
15
மீண்டும் நகைபிரியர்களுக்கு ஷாக்.! கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை.! ஒரு சவரன் விலை இவ்வளவா.?
Gold rate

போட்டி போட்டு தங்கம் வாங்கும் இந்திய மக்கள்

தங்கத்தின் மீதான ஆர்வத்தின் காரணமாக இந்திய மக்கள் அதிகளவு தங்கத்தில் முதலீடு செய்து வருகிறார்கள்.  மேற்குலக நாடுகள் தங்கத்தை விற்க தொடங்கியுள்ள நிலையில் அதிகளவிலான இந்திய மக்கள் தங்கத்தை வாங்குகிறார்கள். இதற்கு அடுத்ததாக சீனாவும் போட்டி போட்டு தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள். எனவே தற்போது உள்ள நிலையில் இந்தியாவும் சீனாவும் தங்கத்தை  அதை தாங்கி பிடிக்கிறது. இந்தியாவில் பொறுத்தவரை திருமணம் சீசன் காரணமாக அதிகளவு தங்கத்தின்  மீது முதலீடு செய்யப்படுகிறது
 

25
gold rate in chennai

தங்கத்தில் முதலீடு ஏன்.?

மேலும் தங்கத்தின் மீது முதலீடு செய்வதால் அவசர தேவைக்கு எந்த நேரத்திலும் விற்க முடியும் என்ற காரணத்தால் நடுத்தர வர்க்க மக்களும் தற்போது தங்கத்தை வாங்கி வைக்கிறார்கள். மேலும் எதிர்காலத்தில் தங்களது குழந்தைகளின் சேமிப்பிற்காகவும், மருத்துவம், கல்வி உள்ளிட்ட தேவைகளுக்கும் தற்போதே முதலீடாக தங்கத்தை வாங்கும் நிலை உள்ளது. அதற்கு ஏற்றார் போல் தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் ஒரு சவரன் ஒரு லட்சத்தை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. 

35
gold rate in tamilnadu

உயரும் தங்கம் விலை

மேலும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிகிறது. இதன் காரணமாகவே அமெரிக்காவில் தங்கம் விலை குறைந்தாலும் இந்தியாவில் அது அதிகரிக்கிறது. மேலும் வரும் நாட்களில் பொருளாதார மாற்றத்தின் அடிப்படையில் தங்கத்தின் விலை அதிகரிக்குமா.? அல்லது குறையும.? என தெரியவரும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தங்கத்தின் விலையானது படிப்படியாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. 

45
today gold rate

இன்றைய தங்கம் விலை என்ன.?

தங்கத்தின் விலையானது கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்து வருகிறது. அதன் படி கடந்த திங்கட் கிழமை தங்கம் கிராம் ஒன்றுக்கு 15 ரூபாயும், சவரனுக்கு 120 ரூபாயும் அதிகரித்தது. இதனையடுத்து நேற்று மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்தது. அதன் படி  கிராம் ஒன்றுக்கு 75 ரூபாய் அதிகரித்து 7,205 ரூபாய்க்கும்,  சவரனுக்கு 600 ரூபாய் அதிகரித்து ஒரு 57,540 ரூபாய்க்கு வி்ற்பனை செய்யப்பட்டது. இன்று தங்கத்தின் விலை மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது. 

55

இன்றும் தங்கம் விலை உயர்வு

அதன் படி கிராமுக்கு 80  ரூபாய் உயர்ந்து 7ஆயிரத்து 285 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து 58ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஒரு சவரனுக்கு 1240 ரூபாய் அதிகரித்துள்ளது. 

click me!

Recommended Stories