Published : Feb 10, 2025, 09:51 AM ISTUpdated : Feb 10, 2025, 10:21 AM IST
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒரு சவரன் தங்கம் விரைவில் 80 ஆயிரம் முதல் 1 லட்சம் ரூபாய் வரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து 63,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கதறும் நகைப்பிரியர்கள்.! மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கம் விலை.!
நிலத்திலோ அல்லது தங்கத்திலோ முதலீடு செய்தால் எப்போதும் நஷ்டம் ஏற்படாது என கூறுவார்கள். அதற்கு ஏற்றார் போல் தங்கத்தின் விலையானது வரலாறு காணாத வகையில் உச்சத்தை தொட்டு வருகிறது. நிலத்தில் முதலீடு செய்யவேண்டும் என்றால் குறைந்தபட்சம் சில பல லட்சங்கள் தேவைப்படும். ஆனால் நடுத்தர வர்க்க மக்களால் அதிகளவு பணம் முதலீடு செய்ய முடியாது என்ற காரணத்தால் தங்கம் ஒரு சிறந்த முதலீடாக உள்ளது.
24
அந்த வகையில் தங்கத்தின் விலையானது தற்போது வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்து வருகிறது. இதனால் நகையைப் பொறுத்தவரை சில ஆயிரங்கள் இருந்தாலே அதனைப் பயன்படுத்தி முதலீடு செய்யலாம். அமெரிக்க தேர்தல் முடிவடைந்த நிலையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. கடந்த ஒரு சில மாதங்களில் ஒரு சவரனுக்கு 10 ஆயிரம் ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது.
34
ஒரு சவரன் 1 லட்சம் தொடும்
தங்கத்தின் விலையானது வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஒரு சவரன் இந்தாண்டு இறுதிக்குள் 80ஆயிரம் முதல் 1 லட்சம் ரூபாயை தொடும் என கணித்துள்ளனர்.
44
இன்றும் அதிகரித்த தங்கம் விலை
தங்கத்தின் விலை கடந்த சனிக்கிழமை ஒரு கிராம் தங்கம் ரூ.15 உயர்ந்து 7,945க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் தங்கம் ரூ.120 உயர்ந்து 63,560 ரூபாய்க்கும் விற்பனையானது. இன்று தங்கத்தின் விலையானது மீண்டும் அதிகரித்துள்ளது.
அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 35 ரூபாய் அதிகரித்து 7980 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து 63ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.