Published : Feb 21, 2025, 09:33 AM ISTUpdated : Feb 21, 2025, 09:38 AM IST
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பிப்ரவரி 11ஆம் தேதி ஒரு சவரன் 64ஆயிரத்தை கடந்து தற்போது 65 ஆயிரம் ரூபாயை தொடவுள்ளது. இதனால் நகை பிரியர்கள் கவலை அடைந்துள்ளனர், முதலீடு செய்தவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தங்கம் வாங்க இன்று நல்ல சான்ஸ்.! அதிரடியாக குறைந்த விலை
தங்கத்தின் விலையானது ஒவ்வொரு நாளும் புதிய புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் நகைப்பிரியர்களுக்கு 2025ஆம் ஆண்டு அதிர்ச்சி தரும் ஆண்டாகவே உள்ளது. இதன் படி ஜனவரி 22 ஆம் தேதி ஒரு சவரன் 60ஆயிரத்தை தொட்ட நிலையில், பிப்ரவரி 5ஆம் தேதி ஒரு சவரனுக்கு 3 ஆயிரம் ரூபாய் அதிகரித்து 63ஆயிரத்தை தாண்டியது. அடுத்ததாக பிப்ரவரி 11ஆம் தேதி ஒரு சவரன் 64ஆயிரத்தை கடந்து தற்போது 65 ஆயிரம் ரூபாயை தொடவுள்ளது.
25
கதறும் நகைப்பிரியர்கள்
இதனால் தங்க நகை பிரியர்கள் நகைக்கடைகளை வேடிக்கை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் தங்கம் விலை உயர்வால் திருமணத்திற்கு நகை வாங்க திட்டமிட்டவர்கள் கண்ணீர் விட்டு கதறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த விலை உயர்வால் தங்க நகைகளில் அதிகளவில் முதலீடு செய்தவர்கள் சந்தோஷத்தில் துள்ளி குதித்து வருகிறார்கள்.
35
ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை
தங்கம் விலை உயர்வுக்கு முக்கியமாக அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு ஏற்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தான் காரணம் என கூறப்படுகிறது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள வர்த்த போர் அபாயம் காரணமாக தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
தங்கத்தின் விலையானது இன்னும் பல மடங்கு அதிகரிக்க போவதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஒரு சவரன் எளிதாக 70 முதல் 80 ஆயிரத்தை தொட்டுவிடும் என கூறப்படுகிறது.
45
4 நாளில் 1440 ரூபாய் அதிகரிப்பு
இந்த நிலையில் தங்கத்தின் விலையானது இந்த வாரம் தொடக்கத்தில் இருந்து உயர்ந்து வருகிறது. அதன் படி, திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.400-ம், செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.240-ம் புதன் கிழமை சவரனுக்கு ரூ.520, வியாழக்கிழமை நேற்று 280 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,560-க்கும் விற்பனையானது. ஒட்டுமொத்தமாக இந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 1440 ரூபாய் அதிகரித்துள்ளது.
55
இன்றைய தங்கம் விலை என்ன.?
நேற்று தங்கம் கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து 8,070 ரூபாய்க்கும், சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து 64,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்று தங்கத்தின் விலையானது அதிரடியாக குறைந்துள்ளது. அந்த வகையில் கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து 8025 ரூபாய்க்கும், சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 64ஆயிரத்து 200 ரூபாய்க்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கம் விலை குறைந்திருப்பது நகைப்பிரியர்களை சற்று மகிழ்ச்சி அடையவைத்துள்ளது.