Published : Jan 28, 2025, 09:36 AM ISTUpdated : Jan 28, 2025, 09:43 AM IST
தங்கத்தின் விலை உச்சத்தை தொட்ட நிலையில், சமீபத்தில் விலை சற்று குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் 60,080 ரூபாய்க்கு விற்பனையாகிறது, இது நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் தங்கத்தின் விலை ஏறி இறங்கி வருகிறது.
தங்கத்தின் மீதான விலையானது உச்சத்தை தொட்ட நிலையில் நடுத்தர வர்க்க மக்களால் தங்கத்தை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. நகைக்கடைகளில் மட்டுமே தங்க நகைகளை வியந்து பார்க்கும் நிலை உருவாகியுள்ளது. அந்த அளவிற்கு தங்கம் விலை அதிகரித்துள்ளது. ஒரு சவரன் 60ஆயிரம் என்ற உச்சத்தை தொட்டுள்ளது. வரும் நாட்களில் இன்னமும் தங்கத்தின் விலை உயரும் என தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
25
தங்கத்தில் முதலீடு
சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் தான் தங்கம் விலையானது தினமும் ஏறி இறங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சுமார் 40ஆயிரம் ரூபாய் அளவிற்கு ஒரு சவரனுக்கு அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வானது தற்போதும் தொடர்ந்து கொண்டு வருகிறது. 2025ஆம் ஆண்டின் முதல் நாளே தங்கம் விலையானது அதிரடியாக உயர்ந்திருந்தது.
35
அத்தியாவசிய தேவைக்கு தங்கம்
தங்கத்தின் மீதான ஆர்வம் இந்திய மக்களிடம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாகவே மற்ற நாட்டு மக்களை விட இந்திய மக்கள் அதிகளவு தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். மேலும் திருமண நிகழ்வுகள், விஷேச நாட்களில் தங்கத்தை அணிவதற்கு விருப்பப்படுவார்கள். தங்க நகை ஆடம்பர பொருளாக இருந்தாலும் அத்தியாவசிய தேவைக்கும் பெரிய அளவில் உதவியாக உள்ளது. இதன் படி மருத்துவம், கல்வி, திருமணம் போன்ற காலங்களில் பண தேவைக்காக நகைகளை விற்கவோ, அடகு வைக்கவோ முடிகிறது . எனவே தங்கத்தை அவசர கால சேமிப்பாவும் மக்கள் வாங்கி வருகிறார்கள்.
45
ஏறி இறங்கும் தங்கம் விலை
கடந்த வாரம் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்ட நிலையில் அடுத்த சில நாட்கள் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டது. அதே நேரம் வாரத்தின் முதல் நாள் நேற்று நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்ககூடிய வகையில் விலையானது சற்று குறைந்தது. கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 7,540 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 60ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
55
தங்கம் விலை என்ன.?
இன்று தங்கத்தின் விலையானது மீண்டும் குறைந்துள்ளது. அந்த வகையில் கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து 7ஆயிரத்து 510 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 60ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றும் இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.