ஒரு சவரன் தங்கம் விலை ரூ.85,000 முதல் ரூ.90,000 வரை குறைய வாய்ப்புள்ளதாகவும், வரும் மார்ச் மாதம் வரை இந்தச் சரிவு நீடிக்கும் என்றும் பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் கணித்துள்ளார்.
கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவது நகைப் பிரியர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தங்கம் விலை இன்னும் குறையுமா? திடீரென உயர்ந்து அதிர்ச்சி கொடுக்குமா எனப் பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்நிலையில், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.85,000 முதல் ரூ.90,000 வரை குறைய வாய்ப்புள்ளதாகவும், வரும் மார்ச் மாதம் வரை இந்தச் சரிவு நீடிக்கும் சூழல் உள்ளதாகவும் பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜனவரியில் ஒரு சவரன் ரூ.57,000 என்ற அளவில் இருந்த தங்கம் விலை, தொடர்ந்து உயர்ந்து இந்த ஆண்டு ஜனவரியில் ஒரு சவரன் ரூ.1.34 லட்சம் என்ற வரலாற்று உச்சத்தைத் தொட்டு நகைப் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இனி தங்கம் விலை குறையவே குறையாது என நினைத்திருந்த நிலையில், தற்போது மளமளவெனச் சரிந்து வருகிறது. 1 லட்சம் ரூபாய்க்குக் கீழே இறங்கிய தங்கம் விலை, தற்போது 1 சவரன் ரூ.91,720 என்ற அளவுக்குக் குறைந்துள்ளது. இதனால், நகை வாங்கத் திட்டமிட்டவர்கள் இப்போது வாங்கலாமா அல்லது இன்னும் குறையுமா எனக் காத்திருக்கின்றனர்.
24
ஆனந்த் சீனிவாசன் கணிப்பு என்ன?
தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன், தங்கம் விலை நிலவரம் குறித்துக் கூறியதாவது;
3, 4 மாதங்களாக கூறியது போலவே தங்கம் விலை குறைந்துகொண்டே வருகிறது. இப்போதைக்கு இதே அளவில்தான் இருக்கும். ஆனால், அமெரிக்காவில் வட்டி விகிதத்தை எவ்வளவு ஏற்றப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. வரும் டிசம்பர் 7, 8-ம் தேதிகளில் நடைபெறும் கூட்டத்தில் வட்டி விகிதம் உயருமா இல்லையா என்பது தெரிந்துவிடும். கால் சதவீதம் (0.25%) மட்டுமே ஏற்றப் போகிறார்கள் என்றால் தங்கம் இவ்வளவு தூரம் குறைந்திருக்காது.
34
வரும் மார்ச் மாதம் வரை நீடிக்கும் சரிவு:ஆனந்த் சீனிவாசன்
சிலர் 0.50% வரை வட்டி விகிதத்தை ஏற்றப்போவதாக கூறுகின்றனர். அதனால்தான் தங்கம் விலை இவ்வளவு தூரம் குறைந்து உள்ளது. டிச.7, 8-ம் தேதி வரை விலை குறைய வாய்ப்புள்ளது; அப்போது வட்டி விகிதம் அரை சதவீதம் வரை உயர்த்தப்படலாம். இதேபோல் மார்ச் மாதத்திற்குள் மற்றொரு முறையும் வட்டி விகிதத்தை மாற்றுவார்கள். அப்போதும் அரை சதவீதம் உயர்த்தப்பட்டால், மொத்தமாக ஒரு சதவீதம் (1%) வரை அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர வாய்ப்புள்ளது.
மார்ச் மாதத்திற்குள் 1% வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால், 1999-ம் ஆண்டிற்குப் பிறகு அமெரிக்காவில் இவ்வளவு பெரிய அளவில் வட்டி விகிதம் உயர்த்தப்படுவது இதுவே முறையாகும். இதனால் டாலரின் மதிப்பு மேலும் உயர்ந்து, முதலீடுகள் அனைத்தும் டாலர் பக்கம் திரும்பும். டாலர் மதிப்பு கூடக்கூடத் தங்கத்தின் விலை குறையத் தொடங்கும். எனினும், சீனா எவ்வளவு தங்கம் வாங்குகிறது என்பதைப் பொறுத்தே விலைச் சரிவு அமையும். சீனா தற்போது அதிகளவில் தங்கத்தை வாங்கவுள்ளது; ஆனால் அந்நாட்டு அரசு அதை வெளிப்படையாக அறிவிக்காது. எப்படிப் பார்த்தாலும் வரும் மார்ச் மாதம் வரை தங்கம் விலை இதே போக்கில் மேலும் குறையவே வாய்ப்புள்ளது. தோராயமாக ஒரு சவரன் தங்கம் விலை ரூ.85,000 முதல் ரூ.90,00-க்குள் இருக்கும் என அவர் கணித்துள்ளார்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.