Published : Jan 27, 2025, 09:37 AM ISTUpdated : Jan 27, 2025, 11:19 AM IST
2025ஆம் ஆண்டு தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒரு சவரன் தங்கம் தற்போது 60,440 ரூபாயை எட்டியுள்ளது, ஆண்டின் இறுதிக்குள் 80,000 ரூபாயைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நகைப்பிரியர்களுக்கு குஷி.! குறைந்தது தங்கம் விலை- ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா.?
நகைப்பிரியர்களுக்கு ஷாக்
சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் தான் தங்கம் விலையானது தினமும் ஏறி இறங்கி வருகிறது. அந்த வகையில் நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுக்கும் ஆண்டாக 2025ஆம் ஆண்டு அமைந்துள்ளது. இந்த ஆண்டின் முதல் நாளே தங்கம் விலையானது அதிரடியாக உயர்ந்திருந்தது. ஆரம்பமே இப்படியென்றால் நாட்கள் செல்ல செல்ல வரலாறு காணாத விலை உயர்வை தங்கம் சந்தித்துள்ளது. அந்த படி தற்போது ஒரு சவரன் 60,440 ரூபாய் என்ற உச்சத்தை தொட்டுள்ளது.
24
gold rate increase
புதிய உச்சத்தில் தங்கம் விலை
தங்க நகை உயர்வு காரணமாக நடுத்தர வர்க்க மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக தை மாதம் பிறந்து முகூர்த்த நாட்களில் அதிகளவிலான திருமணங்கள் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தங்கம் விலையானது புதிய உச்சத்தை தொட்டுள்ளதால் தங்கள் பெண் குழந்தைகளின் திருமணத்திற்காக நகைகள் வாங்க திட்டமிட்டவர்களுக்கு கூடுதலாக பல லட்சங்கள் ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதன் படி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தங்கத்தின் விலையானது சவரனுக்கு 5ஆயிரம் ரூபாய் அளவிற்கு படிப்படியாக அதிகரித்துள்ளது.
34
gold jewellery rate
தங்கத்தை வாங்கி குவிக்கும் முதலீட்டாளர்கள்
இந்த விலை உயர்வானது இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதன் படி ஒரு சவரன் இந்தாண்டு இறுதிக்குள் 80ஆயிரத்தை தாண்டும் என தங்க நகை வியாபாரிகள் அதிர்ச்சி தகவலை கூறி வருகிறார்கள். எனவே தற்போதே தங்கத்தை வாங்கி வைத்தால் லாபம் கிடைக்கும் என அதிகளவில் உயர்வகுப்பு மக்கள் தங்கத்தை வாங்க தொடங்கியுள்ளனர்.
44
gold rate today
இன்றைய தங்கம் விலை என்ன.?
இந்த நிலையில் தங்கத்தின் விலையானது கடந்த வாரம் புதிய உச்சத்தை தொட்டது. அதன் படி ஒரு கிராம் 7555 ரூபாய்க்கும், சவரன் 60ஆயிரத்து 440 ரூபாய்க்கும் விற்பனையானது. இதனையடுத்து கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமையில் தங்கம் விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டது. இன்று வாரத்தின் முதல் நாள் தங்கம் விலையானது குறைந்துள்ளது.
அதன்படி கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 7,540 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 60ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.