Gold Price: 1955‍ல் 10 கிராம் தங்கம் வெறும் ரூ.79.. 1955 டூ 2026 விலை எப்படி இருந்தது? முழு லிஸ்ட் இதோ!

Published : May 15, 2026, 02:52 PM IST

Gold Price: இந்தியாவில் 1955ம் ஆண்டு 10 கிராம் தங்கத்தின் விலை வெறும் ரூ.79 ஆக இருந்தது. 1955ம் ஆண்டு முதல் 2026 வரை தங்கத்தின் விலை குறித்த முழு பட்டியலை இந்த செய்தியில் பார்க்கலாம்.

PREV
14
இந்தியாவில் உச்சம் தொடும் தங்கத்தின் விலை

இந்தியாவில் தங்கம் என்பது வெறும் ஆபரணம் மட்டுமல்ல; அது ஒரு குடும்பத்தின் அந்தஸ்து, பாரம்பரியமாக கருதப்படுகிறது. மேலும் ஆபத்து காலங்களில் கைகொடுத்து உதவும் நண்பனாகவும் தங்கம் விளங்கி வருகிறது. அண்மைக்காலமாக, மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை உயர்த்தியதைத் தொடர்ந்து, உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது.

தங்கத்தின் வியத்தகு வளர்ச்சி

இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.14,950 ஆக உள்ளது. ஒரு பவுன் தங்கத்தின் விலை 1,19,600 ஆக உள்ளது. கடந்த ஏழு தசாப்தங்களில் இந்தியாவில் 10 கிராம் தங்கத்தின் விலை அடைந்துள்ள வியக்கத்தக்க வளர்ச்சியைப் பார்த்தால், அதன் உண்மையான மதிப்பு நமக்குத் புரியும். 1955ஆம் ஆண்டில் வெறும் 79 ரூபாயாக இருந்த 10 கிராம் தங்கம், இப்போது 2026ஆம் ஆண்டில் 1.6 லட்சம் ரூபாயைக் கடந்து இமாலய உச்சத்தை தொட்டுள்ளது.

24
இந்தியாவில் தங்கம் விலை உயர்வு முழு பட்டியல்

இந்தியாவில் 1950ம் ஆண்டுகளுக்கு பிறகு தங்கத்தின் விலை எந்த அளவுக்கு உச்சம் அடைந்துள்ளது என்பதற்கு நாம் கீழே கொடுத்துள்ள அட்டவணையே மிகச்சரியான சாட்சியாக அமைந்துள்ளது.

ஆண்டு           10 கிராம் தங்கத்தின் விலை (ரூபாயில்)

1955                     ரூ.79

1960                     ரூ.111

1970                     ரூ.184

1980                    ரூ.1,330

1990                    ரூ.3,200

2000                    ரூ.4,400

2005                    ரூ.7,000

2010                   ரூ.18,500

2015                  ரூ.26,343

2020                  ரூ.48,651

2022                  ரூ.56,100

2023                 ரூ.61,100

2024                  ரூ.74,100

2025                 ரூ. 1,13,000

2026 (தற்போதைய மதிப்பீடு) ரூ. 1,60,000+

34
தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் ஒவ்வொரு ஆண்டும் தங்கத்தின் விலை உச்சம் அடைந்து வருவதை பார்த்து நீங்களே மூச்சை பிடித்து உட்கார்ந்து இருப்பீர்கள். 1955ம் ஆண்டு வெறும் 79 ரூபாய்க்கு விற்கப்பட்ட 10 கிராம் தங்க‌த்தின் விலை இன்று 1,60,000 ஆக உள்ளது. இந்தியாவில் இந்த அளவுக்குக் கட்டுக்கடங்காமல் உயர்ந்ததற்குப் பின்னால் பல்வேறு முக்கியப் பொருளாதாரக் காரணங்கள் உள்ளன.

பணவீக்கம்: காலப்போக்கில் பணத்தின் வாங்கும் திறன் குறைந்து வரும் நிலையில், பணவீக்கத்திற்கு எதிரான ஒரு சிறந்த கேடயமாக தங்கம் செயல்படுகிறது. இதனால் தங்கம் விலை உச்சம் தொட்டது.

உலகளாவிய சூழல்: சர்வதேச அரசியல் பதற்றங்கள், போர்கள், பொருளாதார மந்தநிலை மற்றும் கரன்சி மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் போன்ற காலங்களில் முதலீட்டாளர்கள் தங்கத்தையே பாதுகாப்பான புகலிடமாக கருவதால் தங்கத்துக்கான கிராக்கி அதிகரித்து கொண்டே செல்கிறது.

44
தங்கத்துக்கு அதிகரிக்கும் தேவை

இந்தியாவில் அதிகரிக்கும் தேவை: நாம் முதலிலேயே சொன்னபடி இந்தியாவில் தங்கம் என்பது ஒரு பாரம்பரிய அடையாளமாக பார்க்கப்படுகிறது. நமது நாட்டில் பண்டிகைகள், சுபமுகூர்த்த நாட்கள் மற்றும் திருமணக் காலங்களில் தங்கத்திற்கான தேவை எப்போதும் அதிகரித்து கொண்டே வருவது விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.

பொருளாதார வல்லுநர்கள் தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீட்டுச் சொத்தாக(Safe Haven Asset) பார்க்கிறார்கள். பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சியோ அல்லது நாட்டின் பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மையோ ஏற்படும் போதெல்லாம், முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் பக்கமே திரும்புகிறது. இதனாலும் தங்கத்தின் கிராக்கி ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே செல்கிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories