ரூ.1,499-க்கு விமான டிக்கெட்.. ஏர் இந்தியா சலுகை.. பஸ் டிக்கெட் விலைக்கு விமானப் பயணம்

Published : Feb 05, 2026, 10:03 AM IST

ஏர் இந்தியா தனது "Namaste World Sale" மூலம் பயணிகளுக்கு ஒரு அருமையான வாய்ப்பை வழங்குகிறது. இந்த சலுகையின் கீழ் விமான டிக்கெட்டுகளை வெறும் ரூ.1,499 முதல் முன்பதிவு செய்யலாம்.

PREV
15
ஏர் இந்தியா விமான சலுகை

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான ஏர் இந்தியா, பயணிகளுக்காக மிகக் குறைந்த விலையில் விமானப் பயணம் செய்யும் வாய்ப்பை வழங்கும் “Namaste World Sale” சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. விமான டிக்கெட் விலை அதிகம் என்பதால் பலர் விமானப் பயணத்தை கனவாகவே வைத்திருந்த நிலையில், இந்த சலுகை பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இந்த ஆஃபரில், உள்நாட்டு விமானப் பயணங்களை வெறும் ரூ.1,499 முதல் முன்பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

25
ரூ.1,499-க்கு விமான டிக்கெட்

பொதுவாக நீண்ட தூரப் பயணங்களுக்கு இந்தியர்கள் ரயிலையே அதிகம் தேர்வு செய்கிறார்கள். காரணம், குறைந்த செலவு மற்றும் வசதி. ஆனால் விமானப் பயணம் வேகமாகவும் சௌகரியமாகவும் இருந்தாலும், அதிக கட்டணம் காரணமாக அது பலருக்கும் எட்டாத ஒன்றாக இருந்தது. தற்போது விமான நிறுவனங்கள் தொடர்ந்து சிறப்பு விற்பனைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்குவதால், நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட மக்கள் விமானப் பயணத்தை அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர்.

35
ஏர் இந்தியா விமான டிக்கெட் தள்ளுபடி

ஏர் இந்தியா கொண்டு வந்துள்ள இந்த Namaste World Sale-ல், எகனாமி கிளாஸ் டிக்கெட்டுகள் ரூ.1,499 முதல் கிடைக்கின்றன. அதே நேரத்தில், பிரீமியம் ஏகனாமி பயணத்திற்கு ரூ.2,249 முதல், பிஸினஸ் கிலாஸ் பயணத்திற்கு ரூ.9,999 முதல் டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, சில வழித்தடங்களில் இந்த விலை, சொகுசு பேருந்து கட்டணத்தை விடக் கூட குறைவாக இருப்பது பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

45
விமான டிக்கெட் தள்ளுபடி

இந்த சலுகையின் கீழ் பயணம் செய்ய விரும்புவோர், 2026 பிப்ரவரி 5-ஆம் தேதிக்குள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்தால், 2026 பிப்ரவரி 11 முதல் டிசம்பர் 31 வரை எந்த நாளிலும் பயணம் செய்ய முடியும். மேலும், ஒரு முறை பயண தேதி மாற்றும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச ரிட்டர்ன் டிக்கெட்டுகள் ரூ.12,676 முதல் தொடங்குகின்றன.

55
குறைந்த விலை விமான டிக்கெட்

இந்த சலுகை ஏர் இந்தியா விமானங்களுக்கு மட்டும் பொருந்தும். ஒன்-வே மற்றும் ரவுண்ட் ட்ரிப் முன்பதிவுகளுக்கு இது செல்லுபடியாகும். குறைந்த எண்ணிக்கையிலான சீட்கள் மட்டுமே இருப்பதால், “முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை” அடிப்படையில் டிக்கெட்டுகள் வழங்கப்படும். மார்ச் 8, ஏப்ரல் 2, ஏப்ரல் 3, ஆகஸ்ட் 14, ஆகஸ்ட் 31 மற்றும் அக்டோபர் 2 ஆகிய நாட்கள் ப்ளாக்அவுட் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த நாட்களில் இந்த சலுகை பொருந்தாது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories