Post Office Schemes
இன்றைய காலக்கட்டத்தில், எல்லோரும் முடிந்தவரை பணத்தை சேமிக்க விரும்புகிறார்கள். பாதுகாப்பான சேமிப்பு என்று வரும்போது, சிறுசேமிப்புத் திட்டங்களைத் தேர்வு செய்கிறார்கள். அந்த வகையில் தபால் அலுவலக சிறுசேமிப்புத் திட்டங்கள் பிக்ஸட் டெபாசிட்டை விட அதிக வட்டியைக் கொடுக்கின்றன.
இந்த பிரபலமான போஸ்ட் ஆபிஸ் திட்டங்களில் எந்த சந்தை ஆபத்தும் இல்லை. ஒரு முதலீட்டாளர் ஆபத்து இல்லாமல் முதலீடு செய்ய விரும்பினால், இந்தத் திட்டங்களில் தாராளமாக முதலீடு செய்யலாம்.
Senior Citizen Saving Scheme (SCSS)
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் (SCSS) பெயரே இந்தத் திட்டம் மூத்த குடிமக்களுக்கானது என்பதைக் குறிக்கிறது. அதாவது 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இத்திட்டத்தின் பலன்களைப் பெறலாம். இந்த திட்டத்தில், முதலீட்டாளர் ஒரு மொத்த தொகையை முதலீடு செய்ய வேண்டும்.
அதிகபட்சமாக ரூ.30 லட்சத்தை முதலீடு செய்யலாம். இத்திட்டம் வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரிச் சலுகைகளையும் வழங்குகிறது. இத்திட்டத்தில் தற்போதைய வட்டி விகிதம் 8.2%. திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். 5 ஆண்டுகளுக்குப் பிறகு மேலும் நீட்டிக்கப்படலாம்.
Kisan Vikas Patra
கிசான் விகாஸ் பத்ரா ஒரு சேமிப்பு சான்றிதழ். இது உத்தரவாதமான வருமானத்தை அளிக்கிறது. இந்தத் திட்டத்தில் முதலீட்டாளருக்கு வரிச் சலுகை கிடைக்காது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய அதிகபட்ச வரம்பு இல்லை.
7.5% வருடாந்திர கூட்டு வட்டி விகிதம் கிடைக்கும். முதிர்வு காலம் 115 மாதங்கள் (9 ஆண்டுகள் 7 மாதங்கள்).
Post Office Monthly Income Scheme (MIS)
தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தில் (எம்ஐஎஸ்), ஆண்டுதோறும் குறைந்தபட்சம் ரூ.1500 முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்சம் ரூ.9 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இந்தத் திட்டத்தில் முதலீட்டுத் தொகையில் ஈட்டப்படும் வருமானம் வரிக்கு உட்பட்டது.
இந்தத் திட்டத்திற்கான வட்டி விகிதம்- 7.4%. இந்த வட்டி ஒவ்வொரு மாதமும் செலுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் முதிர்வு காலமும் 5 ஆண்டுகள். தேவைப்பட்டால் நீட்டிக்கும் வாய்ப்பும் உள்ளது.
National Savings Certificates
தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள் உத்தரவாதமான வருமானத்தை வழங்குகின்றன. இந்தத் திட்டத்தில் முதலீட்டின் மீதான வட்டி முதிர்வு காலத்தில்தான் செலுத்தப்படும். தேசிய சேமிப்புச் சான்றிதழ்களில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதலீடு செய்யப்பட வேண்டும். அதிகபட்ச முதலீட்டு வரம்பு இல்லை.
இந்தத் திட்டத்திலும், முதலீட்டாளர் வரி விலக்கின் பலனைப் பெறுகிறார். 7.7 சதவீதம் வருடாந்திர கூட்டு வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இதன் முதிர்வுக் காலம் 5 ஆண்டுகள்.
Mahila Samman Savings Certificate
மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் இந்தியப் பெண்களிடையே மிகவும் பிரபலமானது. இந்தத் திட்டத்தில் வரிச் சலுகை கிடையாது. ஆனால் பெண்கள் மட்டுமே இதில் சேர முடியும்.
7.5% வருடாந்திர கூட்டு வட்டி விகிதம் கொண்ட இத்திட்டத்தின் முதிர்வு காலம் 2 ஆண்டுகள்.