10 ரூபாய், 20 ரூபாய் பற்றி நிதி அமைச்சகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Published : Feb 04, 2025, 12:20 AM IST

Finance Ministry on 10 and 20 rupee notes and coins: நாட்டில் 10 அல்லது 20 நாணயங்கள் நிறுத்தப்படப் போகிறது, அல்லது விரைவில் நிறுத்தப்படும் என்ற பேச்சு அடிக்கடி பரவுகிறது. ஆனால், இப்போது அதுகுறித்து மத்திய அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

PREV
15
10 ரூபாய், 20 ரூபாய் பற்றி நிதி அமைச்சகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
10 rupee Coin

நாட்டில் 10 அல்லது 20 நாணயங்கள் நிறுத்தப்படப் போகிறது, அல்லது விரைவில் நிறுத்தப்படும் என்ற பேச்சு அடிக்கடி பரவுகிறது. ஆனால், இப்போது அதுகுறித்து மத்திய அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, 10 மற்றும் 20 நாணயங்கள் மற்றும் நோட்டுகள் குறித்து அரசாங்கம் முக்கியத் தகவல்களை அளித்துள்ளது.

25
Finance Ministry on Coins

நிதி அமைச்சகம் என்ன சொன்னது? நாட்டில் தற்போது எத்தனை 10 ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன என்று நிதி அமைச்சகத்திடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த நிதியமைச்சகம், இன்றும் 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் மற்றும் நோட்டுகள் அச்சிடப்பட்டு நாட்டில் புழக்கத்தில் விடப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

35
Coin circulation

புழக்கத்தில் உள்ளவை: டிசம்பர் 31, 2024 நிலவரப்படி , 25,289 கோடி ரூபாய் மதிப்பிலான 2,52,886 10 ரூபாய் நோட்டுகள் சந்தையில் புழக்கத்தில் உள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 31 டிசம்பர் 2024 நிலவரப்படி, நாட்டில் 79,502 லட்சம் 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. அவற்றின் மதிப்பு ரூ.7950 கோடி.

45
New 20 rupee coins

புதிய 20 ரூபாய் நோட்டுகள்: புதிய 20 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தப்பட்டுவிட்டதா என்ற கேள்விக்கும் நிதி அமைச்சகத்திடம் பதிலளித்துள்ளது. 20 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தப்படவில்லை என்ற நிதி அமைச்சகம், 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் குறைவாகவே காணப்பட்டாலும், அவை இன்னும் புழக்கத்தில் உள்ளன என்று கூறியது. அவற்றின் புழக்கம் நிறுத்தப்பட்டுள்ளது அல்லது திரும்பப் பெறப்படுகிறது என்று வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை எனவும் விளக்கம் அளித்துள்ளது.

55
20 rupee coin

20 ரூபாய் நாணயங்கள்: 2020ஆம் ஆண்டில்தான் முதன்முறையாக 20 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட்டது. நிதியமைச்சகம் அளித்துள்ள தகவலின்படி, 20 ரூபாய் நாணயத்தின் எடை 8.54 கிராம் இருக்கும். அதன் வெளிப்புற விட்டம் 27 மிமீ. வெளி வளையம் நிக்கல்  கலந்த வெள்ளியாகவும் நடுப்பகுதி நிக்கல் கலந்த பித்தளையாகவும் இருக்கும். புதிய 20 ரூபாய் நாணயத்தின் முன்பகுதியில் அசோக தூணின் சிங்க முகங்கள் இருக்கும். கீழே 'சத்யமேவ ஜெயதே' என்றும் எழுதப்பட்டிருக்கும். 'பாரத்' என இந்தியிலும் 'இந்தியா' என்று ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும்.

click me!

Recommended Stories