EPS விதிகளின் கீழ், ஒரு ஊழியர் 58 வயதில் ஓய்வூதியம் பெற உரிமை உண்டு. இருப்பினும், அவர் விரும்பினால், 58 வயதிற்கு முன்பே ஓய்வூதியம் பெறலாம். இதற்காக, ஆரம்பகால ஓய்வூதியம் என்ற ஆப்ஷன் உள்ளது. இதன் கீழ் 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியம் பெறலாம். ஆனால் இந்த விஷயத்தில், 58 வயதிலிருந்து எவ்வளவு சீக்கிரமாக பணத்தை எடுக்கிறீர்களோ, அவ்வளவு குறைவாக, அதாவது ஆண்டுக்கு 4 சதவீதம், பென்ஷன் கிடைக்கும்.